•நந்தினிக்கு திருமண வாழ்த்துக்கள்.
ஐயர் இல்லை. மந்திரம் இல்லை.
எந்தவித ஆடம்பரமும் இல்லை.
எளிமையாக நடந்த நந்தினி திருமணம்
அவர் மாவீரர் நினைவாக உறுதி மொழி ஏற்றுள்ளார்.
தொடர்ந்தும் சமுதாய நலனுக்காக உழைப்போம் என்று கூறியுள்ளார்.
அவர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் மதுவை ஒழிக்கவே பாடுபடுகிறார்.
இருந்தும் 7ம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தும் நீதிமன்றம் வேண்டுமேன்றே அவரை சிறையில் அடைத்தது.
அவர் விரும்பியிருந்தால் மன்னிப்பு கேட்டு வெளியே வந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ தன்னுடன் தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டபோதும் உறுதி தளரவில்லை.
அவருக்காக அவர் தங்கை குரல் கொடுக்க முனைந்தார். அவரையும் சிறையில் அடைக்கப் போவதாக மிரட்டியது காவல்துறை.
தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காக அப் பெண்ணின் கணவரை கொன்றவர் சரவணபவன் அண்ணாச்சி.
தன் பண பலத்தால் சிறை வாழ்வில் இருந்து தப்ப முயற்சி செய்கிறார். ஒருநாள்கூட சிறையில் இருக்க முடியாமல் நெஞ்சுவலி, இடுப்புவலி என்று நாடகம் போடுகிறார்.
ஆனால் நந்தினியோ தன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தும்கூட மன்னிப்பு கேளாமல் சிறை வாழ்வை உறுதியுடன் சந்தித்தார்.
அதனால்தான் தமிழக மக்கள் நந்தினிக்கு ஆதரவாக இருந்தனர்.
நந்தினிக்கு எமது எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
No comments:
Post a Comment