•சுமந்திரன் கூறுவது உண்மை.
அதை அவர் உரத்து கூற வேண்டும்.
அதை அவர் உரத்து கூற வேண்டும்.
அண்மையில் சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரன் இருவரும் இரண்டு விடயங்களை கூறியிருக்கிறார்கள்.
அவ் இரண்டு விடயங்களும் உண்மைகள் விடயங்கள் மட்டுமன்றி அவை உரத்து கூறப்பட வேண்டிய விடயங்களும் ஆகும்.
முதலாவது விடயம் சம்பந்தர் ஐயா கூறியது,
அது என்னவென்றால் புலிகளை அழித்த பின்பு தீர்வு தருவதாக கூறி தமது ஒத்துழைப்பை இந்திய அரசு உட்பட பல நாடுகள் பெற்றுக்கொண்டன என்றார். ( இது ஒருவகையான ஒப்புதல் வாக்குமூலம்)
அது என்னவென்றால் புலிகளை அழித்த பின்பு தீர்வு தருவதாக கூறி தமது ஒத்துழைப்பை இந்திய அரசு உட்பட பல நாடுகள் பெற்றுக்கொண்டன என்றார். ( இது ஒருவகையான ஒப்புதல் வாக்குமூலம்)
இரண்டாவது விடயம் சுமந்திரன் கூறியது
புலிகளை அழித்த பின்பு 13 + தருவதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போது அதில் இருந்து 180 டிக்கிரி திரும்பிவிட்டார் என்று சுமந்திரன் கூறியுள்ளார்;. ( இது ஒருவகை குற்றச் சாட்டு)
புலிகளை அழித்த பின்பு 13 + தருவதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போது அதில் இருந்து 180 டிக்கிரி திரும்பிவிட்டார் என்று சுமந்திரன் கூறியுள்ளார்;. ( இது ஒருவகை குற்றச் சாட்டு)
ஆனால் சுமந்திரனின் இந்த குற்றச்சாட்டை மகிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். தான் ஒருபோதும் அப்படி கூறவில்லை என்கிறார்.
இதை அவதானிக்கும்போது சில கேள்விகள் மனதில் தோன்றுகின்றன.
(1) இனி தன் கூற்றை உண்மை என்று சுமந்திரன் எப்படி நிரூபிக்கப் போகின்றார்?
(2) மகிந்த 13 + தருவதாக கூறியது உண்மை என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் மகிந்தவை ஆதரிக்காமல் ரனில் மைத்திரியை ஆதரித்தது?
(3) ஒருவேளை மகிந்தவைவிட அதிகமாக ரணில் மைத்திரி கோஷ்டியினர் தருவதாக கூறியிருந்தால் அவை என்ன என்பதை சுமந்திரன் கூறுவாரா?
(4) அப்படி அதிகமாக தருவதாக கூறிய ரணில் மைத்திரி கோஷ்டியினரும் இப்போது எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டனர் என்பதையும் அதாவது அவர்களும் 180 டிக்கிரி திரும்பிவிட்டனர் என்பதையும் சுமந்திரன் கூறுவாரா?
குறிப்பு – மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றவுடன் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் லண்டன்வாழ் தமிழர்கள் 60 பேரை சந்தித்தார். அப்போது தமிழீழத்தை தவிர அனைத்தையும் தருவதாக கூறியிருந்தார். புலிகள் ஒரு தீர்விற்கு வருகிறார்கள் இல்லை. எனவே அவர்களை அழிக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று அவர் கேட்டிருந்தார்.
No comments:
Post a Comment