•மலடி பிள்ளை பெற முடியுமா?
தமிழ் ஊடகவியலாளர் இந்தியாவை எதிர்த்து எழுத முடியுமா?
தமிழ் ஊடகவியலாளர் இந்தியாவை எதிர்த்து எழுத முடியுமா?
மலடி பிள்ளை பெற்றால் எப்படி அதிசயமாக இருக்குமோ அதைவிட அதிசயம் தரக்கூடியது எமது தமிழ் ஊடகங்கள் இந்திய அரசை எதிர்த்து எழுதுவது.
தமிழர் நலனுக்கு எதிராக எப்போதும் செயற்பட்டுவருபவரான இந்து ராம்கூட தமிழகத்தில் சிறப்புமுகாமில் நடக்கும் கொடுமைகள் குறித்து “தமிழ் இந்து” வில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஆனால் ஈழத் தமிழ் ஊடகங்கள் மறந்தும்கூட தமிழகத்தில் அகதிகளுக்கு இடம்பெறும் கொடுமைகள் குறித்து மூச்சுகூட விட மாட்டார்கள்.
இதற்கு காரணம் இந்திய அரசு குறித்த அச்சமா அல்லது இந்தியா வழங்கும் அற்ப சலுகைகளுக்கான விசுவாசமா என்று தெரியவில்லை.
யாழ் மருத்தவமனையில் இந்திய ராணுவம் செய்த கொலை குறித்து உதயன் பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிட்டமைக்காக அதன் நிறுவனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் யாழ் இந்திய தூதரால் மிரட்டப்பட்டதாக அவரே பாராளுமன்றத்தில் கூறினார்.
அதுமட்டமல்ல அக் கட்டுரையை எழுதிய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் உயர் படிப்பிற்காக இந்தியா செல்ல வேண்டி எற்பட்டபொது யாழ் இந்திய தூதர் அவருக்கு விசா வழங்காமல் பழி வாங்கினார்.
இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர், யாழ் விரிவுரையாளர் எல்லாம் யாழ் இந்திய தூதரால் பகிரங்கமாக மிரட்டப்படும்போது சாதாரண ஊடகவியலாளர்கள் எப்படி துணிந்து எழுதுவார்கள்?
அதுமட்டுமல்ல இந்திய தூதரால் பல சுலகைகள் அன்பளிப்புகள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்ட்டு வருகிறது. இதற்கு ஆசைப்பட்டும் ஊடகவியலாளர்கள் இந்திய விசவாசம் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலைதான் பலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர் மத்தியிலும் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் எற்படத் தொடங்கியுள்ளது.
ஆம். மலடி பிள்ளை பெறும் அதிசயம் நிகழத் தொடங்கியுள்ளது. ஆதவன் வானொலி தமிழக அகதிகளின் வலிகளை அண்மையில் ஒலிபரப்பியுள்ளது.
அதே ஆதவன் வானொலி கடந்த மாதம் எழு தமிழர் விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவின் குரலை பதிவு செய்தது.
லைக்கா முதலாளியும் லிபரா முதலாளியும் ஈழத் தமிழர்கள்தான். அவர்களது ஆதவன் வானொலியும் ஐபிசி வானொலியும் தமிழ் ஊடகங்கள்தான்.
ஆனால் “ஆதவன்” வானொலி ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா ஈழத் தமிழ் அகதிகளின் வலிகளை பதிவு செய்கிறார். ஐபிசி ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் கனடாவில் 1200 கலைஞர்கள் மேடை ஏற்றியதை பெருமையாக பதிவு செய்கிறார்.
No comments:
Post a Comment