நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் சம்பந்தரும் ஒருவர், தொடர்ந்து 3 மணி நேரம் என்னிடம் தமிழ் மக்கள் பிரச்சினைகள் குறித்தே பேசினார். அவரின் எதிர்கால தாக்குதல் திட்டங்கள் குறித்த பேச்சுகளை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பெடுத்து அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். இப்படிப்பட்ட ஒரு தலைவர் எமது அமெரிக்காவில் இருந்திருந்தால் அவரின் சாணக்கியத்திற்காக உலகமே தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்.
(இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் அம்மையார் எழதிய “நான் வியந்த உலக தலைவர்கள்” புத்தகம் - பக் 425)
(இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் அம்மையார் எழதிய “நான் வியந்த உலக தலைவர்கள்” புத்தகம் - பக் 425)
குறிப்பு- இதனைப் படித்து விட்டு இது அந்த அத்துல் அம்மையாருக்கு தெரியுமா என்று தயவு செய்து கேட்க வேண்டாம். சிரித்து விட்டு கடந்து செல்லுங்கள்.
“பிளீஸ் ஐயா செத்துவிடுங்கள்” என்று நான் எழுதியதால் கடுப்பாகியிருக்கும் ஐயாவின் செம்புகளை குஷிப் படுத்துவதற்காக நான் எழுதிய வரிகள் இவை.
சரி இனி விடயத்திற்கு வருகிறேன்,
மகிந்த அரசு வந்துவிடும் என்பதால்தான் ரணில் அரசை சம்பந்தர் ஐயா காப்பாற்றினார் என்று சிலர் எழுதுகிறார்கள். இது அவரின் சாணக்கியம் என்று வேற புகழ்கிறார்கள்.
அவர்களுடைய கவனத்திற்கு சில விடயங்களை தெரியப்படுத்த விரும்புகிறேன்.
முதலாவது, இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார்- சம்பந்தன் தெரிவிப்பு (12.07.2013 யன்று கூறியது)
இரண்டாவது, தேசியத் தலைவர் மகிந்த ராஜபக்ச என்;று பாராளுமன்றத்தில் சம்பந்தர் தெரிவிப்பு ( இது கடந்த வருடம் கூறியது)
மூன்றாவது, மகிந்த ராஜபக்சவினால்தான் நான் சுதந்திரமாக திருமலை சென்று வர முடிகிறது – சம்பந்தர் பேட்டி ஒன்றில் கூறியது.
குறிப்பு- நாளை நாவற்குழியில் புத்த விகாரை திறப்பு விழா நடக்கிறது. பிரதம விருந்தினர் - சுமந்திரன். இதுபற்றி நான் எதுவும் கூறவிரும்பவில்லை. ஏனெனில் புத்தவிகாரையை அனுமதிக்காவிட்டால் மீண்டும் மகிந்த அரசு வந்துவிடும் என்று கூறுவார்கள்.
No comments:
Post a Comment