•சிங்கள ஜேவிபி கைதிகளுக்கு ஒரு நியாயம்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை நல்லாட்சி அரசின் நியாயம்?
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை நல்லாட்சி அரசின் நியாயம்?
1971ல் ஜேவிபி யினர் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கைது செய்யப்பட்ட தலைவர் ரோகண விஜயவீரா உட்பட அனைத்து கைதிகளும் 4 வருடத்தில் ஜே.ஆர் ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டனர்
பின்பு 1989ல் ஆயுதப் போராட்டம் நடத்தியபோதும் ஜேவிபி யினர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் 5 வருடத்திற்குள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் பத்து வருடம் கடந்த நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நல்லாட்சி அரசு மறுத்து வருகிறது.
பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட ஜே.வி.பி யினரை விடுதலை செய்த அரசு பயங்கரவாதிகள் என்று கூறி கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுக்கிறது.
இதற்கு ஒரே காரணம்தான். அவர்கள் சிங்களவர்கள். இவர்கள் தமிழர்கள். இதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
கைதிகள் விடுதலை விடயத்தில்கூட இனவாதமாக இருக்கும் இந்த அரசு இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வு தரும் என எப்படி நம்புவது?
புலிகளுக்கு உதவியவர்களைக்கூட விடுதலை செய்ய மறுப்பது மட்டுமன்றி அவர்கள் அப்பீல் செய்யக்கூட இந்த அரசு அனுமதி மறுக்கிறதே.
தமிழருக்கு நீதியை மறுக்கும் இந்த அரசை என்ன ம - - க்கு சம்பந்தர் ஐயாவும் சுத்துமாத்து சுமந்திரனும் காப்பாற்றி வருகின்றனர்?
குறிப்பு – தமிழ் அரசியல் கைதி தேவதாசன் ஐந்தாவது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறார்.
No comments:
Post a Comment