•தமிழக இளைஞர்களை இணைத்திருந்தால்
ஈழ விடுதலைப் போராட்டம் எப்படி அமைந்திருக்கும்?
ஈழ விடுதலைப் போராட்டம் எப்படி அமைந்திருக்கும்?
கரும்புலிகளாக பல போராளிகள் தம் உயிரை ஈழ விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணித்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில் அவர்கள் தமது இனத்தின் விடுதலைக்காக வீர மரணம் அடைந்தனர்.
ஆனால் தமிழ்நாடடைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்தக் கொண்டது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியமானது கரும்புலியாக தனது உயிரை தந்தது.
தமிழ்நாட்டில் சிவகாசியைச் சேர்ந்த செந்தூரபாண்டீயன் என்ற செங்கண்ணன் 11.11.1993 யஙன்று கரும்புலியாக தன் உயிரை அர்ப்பணித்தார்.
உண்மையில் இத் தியாகம் மகத்தானது. ஈழத் தமிழர்களால் என்றுமே மறக்க முடியாதது.
செங்கண்ணன் மட்டுமல்ல இன்னும் சில் தமிழக இளைஞர்கள் ஈழத்தில் வந்து போராட்டத்தில் இணைந்திருந்தனர். அவர்களில் சிலர் மாவீரர்களாகவும் மரணித்தனர்.
அதைவிட முத்துக்குமார் உட்பட 17 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர் துறந்தனர்.
நான் அறிந்தவரையில் உலகில் எந்த இனமும் தன் இனத்திற்காக இப்படி ஒரு தியாகத்தை செய்யவில்லை. தாய் தமிழகம் தன் தொப்புள்கொடி உறவுகளுக்காக அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகிறது.
குறைந்தது பத்தாயிரம் தமிழக இளைஞர்களையாவது ஈழப் போராட்டத்தில் இணைக்க வேண்டும். அதற்கு முதல் ஆளாக நானே வருகிறேன் என்று தோழர் தமிழரசன் 1984ம் ஆண்டே எம்மிடம் கூறியிருந்தார்.
அவர் கூறியபடி தமிழக இளைஞர்களை எம் போராட்டத்தில் இணைத்திருந்தால் எமக்கும் ஆட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. கட்டாய ஆட்சேர்ப்பு செய்ய வேண்டி வந்திருக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை இந்திய அரசுகளால் படுகொலைகளை நிகழ்த்தியிருக்க முடியாது.
ஆம். தமிழக இளைஞர்களை இணைத்திருந்தால் வரலாறு நிச்சயம் வேறு மாதிரி அமைந்திருக்கும்.
அதனால்தான் இப்பவும் ஈழத் தமிழர்களும் தமிழக தமிழர்களும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்திய உளவுப்படைகள் மும்முரமாக முயற்சி செய்கின்றன.
ஆனால் வரலாற்றை இழுத்து பிடித்தவிட முடியும் என்ற அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரலாறு படைக்கப் போவது உறுதி.
No comments:
Post a Comment