•மக்கள் போராடுகிறார்கள்.
ஐயா மலர்களைப் போல் உறங்குகிறார்!
ஐயா மலர்களைப் போல் உறங்குகிறார்!
கண்ணியாவில் பிள்ளையார் கோவில் உடைத்து புத்த விகாரை கட்டுகிறார்கள்.
புத்த விகாரை கட்டுவதற்கு அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ் மக்கள் போராடுவதற்கும் தடை விதித்துள்ளது நல்லாட்சி அரசு.
தனது தொகுதியிலேயே பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை கட்டுவது குறித்தோ, அல்லது
தனக்கு வோட்டு போட்ட தமிழ் மக்கள் வீதியில் இறங்கி போராடுவது குறித்தோ, அல்லது
போராடுவதற்குகூட தடைவிதித்த நல்லாட்சி அரசு பற்றியோ
எந்த கவலையும் இன்றி சம்பந்தர் ஐயா உறங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றிக் கேட்டால் நல்லாட்சிஅரசு போனால் மகிந்த ராஜபக்ச ஆட்சி வந்துவிடும் என்று ஐயா கூறுகிறார்.
அதுசரி, கல்முனை விடயம், கண்ணியா விடயம், முல்லைதீவு நீராவியடி கோவில் விடயம் மூன்று விடயங்களுக்கும் தீர்வு கிடைத்த பின்பே நல்லாட்சி அரசைக் காப்பாற்றியதாக சுமந்திரன் சொன்னாரே அது பொய்யா கோபால்?
No comments:
Post a Comment