Tuesday, July 30, 2019

•3வது நாளாக உண்ணாவிரதம் தொடரும்

•3வது நாளாக உண்ணாவிரதம் தொடரும்
தமிழ் அரசியல் கைதி தோழர் தேவதாசன்
கடந்த 11 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தோழர் தேவதாசன் மேன்முறையீடு செய்ய அனுமதி கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அரசோ அல்லது அதிகாரிகளோ இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இந்த நல்லாட்சி அரசை காப்பாற்றி வரும் தமிழ் தலைவர்களும் அக்கறை காட்டவில்லை.
தோழர் தேவதாசன் தன்னை விடுதலை செய்யுமாறு கோரவில்லை. மாறாக தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அப்பீல் செய்ய அனுமதி கோரியே உண்ணாவிரதம் இருக்கிறார்.
இலங்கை ஒரு ஜனநாயகநாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் பொதுபலசேனா ஞானதேரரை மன்னிப்பு அளித்து விடுதலை செய்கின்ற அரசு தேவதாசனுக்கு அப்பீல் செய்யக்கூட அனுமதி அளிக்க மறுக்கிறது.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்று 16 வருட சிறைத்தண்டனை பெற்றவர் இந்த பிக்கு ஞானதேரர். ஒரு சில மாதங்களே சிறையில் இருந்த அவரை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.
விடுதலை பெற்றுள்ள ஞானதேரர் தொடர்ந்தும் முஸ்லிம் மற்றும் தமிழ் இனங்களை மிரட்டுகிறார். இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
11 வருடங்கள் சிறையில் இருக்கும் தேவதாசன் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு மேன்முறையீடு செய்யவே அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது.
சட்டப்படி ஒருவருக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். அதை அரசு மறுக்குமாயின் அங்கு நீதி மறுக்கப்படுகிறது என்று அர்த்தம்.
இது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கும் நன்கு தெரியும். அவர் நினைத்தால் ஒரு தொலைபேசி அழைப்பில் இப் பிரச்சனை தீர்த்து வைக்க முடியும். ஆனால் அதனை அவர் ஒருபோதும் செய்ய மாட்டார்.
இந்த அரசுக்கு ஆபத்து என்றால் ஓடிச்சென்று முண்டு கொடுக்கும் சுமந்திரன் ஒரு தமிழ் அரசியல் கைதிக்கு நீதி மறுக்கப்படும்போது நவத்துவரங்களையும் பொத்திக்கொண்டு உறங்குவார்.
பொதுபலசேனா ஞானதேரருக்கு ஒரு நியாயம்.
தமிழ் அரசியல் கைதி தேவதாசனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்த நல்லாட்சி அரசின் நியாயம்.
இந்த நல்லாட்சி அரசைக் காப்பதுதான் சுமந்திரன் நியாயம்!

No comments:

Post a Comment