தமிழ் அரசுக்கு ஏழு தமிழரை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்றால் அவர்களை நீண்ட பரோலில் விடுதலை செய்ய முடியும்.
ஆனால் ஏழுதமிழர்களின் பரோல் விடுமுறைக்குகூட தமிழக அரசு கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது.
ஒருபுறம் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு மறுபுறம் பரோல் விடுமுறைக்குகூட எதிர்ப்பு காட்டுகிறது.
தமிழக அரசின் இந்த இரட்டைவேட நாடகத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழு தமிழர்களில் ஒருவரான நளினி தன் மகளின் திருமண விடயங்களுக்காக 6 மாதம் பரோல் விடுதலை கேட்டிருந்தார்.
ஆனால் தமிழக அரசு பரோல் விடுதலை வழங்காததுடன் நீதிமன்றத்திலும் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டியுள்ளது.
இறுதியில் நீதிமன்றம் ஒரு மாத பரோல் விடுதலை நளினிக்கு வழங்கியுள்ளது.
நளினி தாயார் என்ற ரீதியில் மகளின் திருமணத்திற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தந்தையரான முருகனுக்கு அந்த ஒரு மாத பரோல் மட்டுமல்ல ஒரு நாள் பரோல்கூட வழங்க நீதிமன்றமும் தயாரில்லை
ஏனெனில் முருகன் ஈழத் தமிழர் என்பதால் அவருக்கு பரோல் விடுமுறையும் மறுக்கப்பட்டுள்ளது.
நம்புங்கள்! இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று.
குறிப்பு – நளினி ஒரு மாத பரோல் விடுமறை பெற குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்.
No comments:
Post a Comment