Tuesday, March 19, 2013

தமிழகம் எங்கும் “தீ” யாக பரவும் மாணவர் போராட்டங்கள்.


தமிழகம் எங்கும் “தீ” யாக பரவும் மாணவர் போராட்டங்கள்.

அஞ்சிய ஆட்சியாளர்கள் போராட்டங்களை நசுக்க முனைகின்றனர்.

எட்டு மாணவர்களை கைது செய்து போராட்டத்தை நசுக்க நினைத்த அரசு இன்று அது தமிழகமெங்கும் பரவுவது கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

அடையார் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் மாணவர். அதுவும் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர். இதுதூன் மாணவர் போராட்டத்தின் மகிமை. அது சாதி, மதம், இனம் எல்லாம் கடந்து அனைவரையும் ஓரணியில் திரட்டும் சக்தி கொண்டது. எனவேதான் மாணவ சக்திக்கு ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தியா இரவில் சுதந்திரம் வாங்கியதால் போலும் இங்கு தூக்கு தண்டனையும் சரி மாணவர் கைதும் சரி நள்ளிரவில்தான் நடத்துகின்றனர். மாணவர்களிடத்தில் வெடி குண்டோ அல்லது துப்பாக்கியோ இல்லை. அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களை 3 நாட்கள் கூட அனுமதிக்கவில்லை. நள்ளிரவில் கைது செய்து பயங்கர குற்றவாளிகளைப் போல் நடத்துகின்றனர்.

அகிம்சை வழியில் போராடுவதை அடக்கினால் நாளை மாணவர்கள் ஆயுதம் தூக்க நேரிடும்!

பொலிசாரின் தோளில் இருக்கும் துப்பாக்கி மாணவர் தோளுக்கு மாற அதிக நேரம் எடுக்காது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

3 comments:

  1. சட்டக் கல்லூரி பெண் மாணவரின் உணர்வுக்கு எமது பாராட்டுக்கள். அவர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள். தமிழர் மனங்களில் இப் பெண் மாணவர் நிச்சயம் நீங்கா இடம் பெறுவார;

    ReplyDelete
  2. முதலில், ராஜிவ் காந்தி கொலையால் இனி தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது என்றார்கள். இப்போது மாணவர்கள் ஒன்று திரண்டு எழுந்து ஆதரவு தெரிவித்ததுதம் இது வெறும் நாடகம் நீண்ட நாட்கள் நிலைக்காது என்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மாணவர் போராட்டம் மத்திய அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் கலக்கத்தைக் கொடுத்துவிட்டது என்பதே.

    ReplyDelete
  3. மத்திய அரசில் அங்கம் வகித்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுவது என்பது சுத்த ஏமாற்று ஆகும். எனவே உண்மையிலே தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என “டெசோ” நினைத்தால் முதலில் மத்திய அரசிலிருந்து வெளியேற வேண்டும். மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.

    ReplyDelete