Saturday, March 9, 2013

மாணவர் போராட்டம் மேலும் மேலும் வளரட்டும். போலி அரசியல்வாதிகளை தூக்கி யெறியட்டும்.


மாணவர் போராட்டம் மேலும் மேலும் வளரட்டும்.
போலி அரசியல்வாதிகளை தூக்கி யெறியட்டும்.

பல வருடங்களின் பின் மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர். உண்ணாவிரதம் , தீக்குளிப்பு போன்றன எவ்வித பயனும் தராது என்பது உண்மையாயினும் மாணவர்கள் போராட ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகும். எனவே அதனை வரவேற்று ஆதரிப்பது ஒவ்வொருவரது கடமையாகும்.

முத்துக்குமார், கடலூர் மணி வரிசையில் இவ் மாணவர்களது தியாகங்களையும் போலி அரசியல்வாதிகள் தங்கள் பதவி நலன்களுக்கு பயன்படுத்த அனுமதிக்காமல் மாணவர்களே இனி வரும் காலங்களில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாக வேண்டும்.

தமிழீழம் கிடைத்தால் அது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு உந்துதலாக அமைந்து விடும் என்பதால் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என அவர்களின் கொள்கை வகுப்பாளர்கள் கூறுகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு அதரவு தெரிவிக்காவிட்டாலும் தமிழகம் வெடிக்கும் என்பதை அவர்களுக்கு புரியவைப்போம்.

மாணவர் போராட்டம் வெடித்து பரவட்டும்.
மத்திய அரசு சுக்கு நூறாக நொருங்கட்டும்.

4 comments:

  1. வழக்கம்போல் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படாமல் இந்த மாணவர்களின் போராட்டம் மேலும் மேலும் வீரியம் பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். போராட்டத்திற்கு மாணவர்கள் தலைமை தாங்கும் நிலை உருவாக வேண்டும்.

    ReplyDelete
  2. சிறு பொறி பெருங்காட்டு தீயாக மாறும். மாணவர் போராட்டம் டில்லி அரசிற்கு பாடம் புகட்டட்டும். போலிகளின் முகத்திரையை கிழித் தெறியட்டும்.

    ReplyDelete
  3. அரசியல்வாதிகள் முதலில் போராட்டத்தை மழுங்கடிக்க முனைவார்கள். அவர்களையும் மீறி வளர்ந்துவிட்டால் ஓடிவந்து கூடி நின்று உரிமை கொண்டாடுவார்கள். எனவே அதற்கு இடங்கொடாது மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

    ReplyDelete
  4. அரை நாள் உண்ணாவிரதம் இருந்துவிட்டு “போர் முடிந்துவிட்டது” என அறிக்கை விடுபவர்கள் அரசியல்வாதிகள். அனால் தமது கோரிக்கைக்காக உயிரையும் விடுபவர்கள் மாணவர்கள். மாணவர்கள் போராட்டம் ஓங்கட்டும்.

    ReplyDelete