Tuesday, March 19, 2013

மாணவர்களே போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.


• மாணவர்களே போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.
• மக்களைதிரட்டிஅரசுமையங்களைமுற்றுகையிடுங்கள்

லாயலாக் கல்லூரி மாணவர்களால் ஆரம்பித்த போராட்டம் இன்று ஆறாவது நாளாக தமிழகமெங்கும் பரவியுள்ளது. மாற்று திறனாளி மாணவர்கள், இளம் வயது மாணவர்கள, வேற்று இன மாணவர்கள் என அனைத்து மாணவர்களும் களம் கண்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சிறைவாசிகள் ,பெண்கள் , டிரைவர்கள, நடிகர் சிம்பு, ராஜேந்தர் என பல தரப்பட்ட மக்களும் ஆதரவளிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் பொலிசாரை ஏவி நசுக்க முயன்ற அரசு அது பலனற்று போக தற்போது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது. ஆனாலும் மாணவர் போராட்டம் தொடருகின்றது.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் மயக்கமுற்று மருத்துமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால் மத்திய அரசோ வாய் திறக்காமல் அசட்டையாக இருக்கிறது. இதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் 12 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் மணிப்பூர் இரோம் சார்மிளாவுக்கே இரங்காத அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இரங்குமா?

உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்களுக்கு இந்த அரசு ஒருபோதும் இரங்காது. அது அரக்க குணம் படைத்தவை.

அரக்க குணம் படைத்த அரசை அடிபணிய வைக்க வேண்டுமானால் மாணவர்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். இஸ்ரவேல் ராணவத்திற்கு எதிராக பாலஸ்தீன சிறுவன் எறியும் கல்லுக்கு இருக்கும் வீரியத்தை மாணவர்கள் உணரவேண்டும்.

மாணவர்களே!
ஆயிரம் ஆயிரமாக அணிதிரளுங்கள். மக்களையும் ஒன்று சேருங்கள். முற்றுகையிடுங்கள். வெற்றி உங்கள் கையில் கிடைக்கும்.

3 comments:

  1. கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!-தமிழக அரசு உத்தரவு
    தமிழக அரசின் இந்த செயலால் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் தமிழக அரசு அறிவித்த காலவரையற்ற விடுமுறையைக் கண்டித்து சென்னை எம்.சி.ராஜா விடுதி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் போராட்டம் ஆரம்பமானது

    ReplyDelete
  2. தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் துளி சதவிதம் கூட குறைய வில்லை காட்டு தீ போல் பல மடங்கு பெருகிவருகிறது விடுமுறை விட்டால் ஒய்த்து விடும் என்று ஆசைபட்ட தமிழக அரசியல் வியாதிகளின் ஆசையில் மண் விழுந்து விட்டது ..தேன் கூட்டை கலைந்த கதை ஆகிவிட்டது... அடக்குவதற்கு இது ஒன்றும் எதிர்கட்சி போராட்டம் அல்ல..வெல்லட்டும் மாணவர் சக்தி

    ReplyDelete
  3. போராடும் வரை 'வீண் முயற்சி' என்பார்கள் ..
    வெற்றி பெற்றவுடன் 'விடா முயற்சி' என்பார்கள்..
    -பிடல் காஸ்ட்ரோ

    ReplyDelete