மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைக்குமா?
இனியாவது அந்த அப்பாவி மக்களுக்கு விடிவு பிறக்குமா?
மலையக தொழிலாளர்களின் சம்பள மறு நிர்ணயத்துக்கான ஒப்பந்தம் இந்த வருடத்தில் மார்ச் மாதத்தில் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அது குறித்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த தடவையும் இது குறித்த ஒப்பந்தம் காலம் கடத்தியே மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை உயருகிறது. விலைவாசி உயருகிறது. ஆனால் மலையக தொழிலாளர்களுக்கு உரிய கூலி மட்டும் அதே விகிதத்தில் ஒருபோதும் உயர்வதில்லை.
தான் வளர்க்கும் பிராணிகளுக்கு கூட உரிய நேரத்தில் உணவு வைக்க நினைக்கும் இந்த சமூகம் தனக்காக உழைக்கும் இந்த மலையக தொழிலாளர்கள் குறித்து சிறிதும் நினைப்பதில்லை. அவர்களது கோரிக்கைகளுக்கு இரங்குவதும் இல்லை.
குளிரிலும் அட்டை கடியிலும் பல மணி நேரம் உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்கு உண்ண உணவு கிடைக்கிறதா? இருக்க வசதியான வீடு இருக்கிறதா? அவர்கள் குழந்தைகளுக்கு கல்விவாய்ப்பு இருக்கிறதா? போதிய மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளதா என யாருமே அக்கறைப்படுவதில்லை.
மலையக தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் சிங்கள இனவெறி அரசுகள் அவர்களை கவனிப்பதில்லை. அவர்கள் இந்திய தமிழர்கள் என்று வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர் அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவோ அவர்களை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கு இப்படி ஒரு லட்சக்கணக்கான மக்கள் இருப்புது கூட தெரியாது.
மலையக மக்களின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் தமது அமைச்சு பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் பேரம் பேசுவதற்கு பயன்படுத்துகின்றனரேயொழிய அந்த மக்களின் விடிவுக்கு பாடுபடுவதில்லை.
இந்த நிலை மாற வேண்டும். இனியாவது அந்த தொழிலாளர்களுக்காக அனைத்து மக்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் விடிவு ஏற்பட வேண்டும்.

அந்த தொழிலாளர்களுக்காக அனைத்து மக்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் விடிவு ஏற்பட வேண்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletehttp://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130302_plantationsalary.shtml
ReplyDelete>மலையக தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் சிங்கள இனவெறி அரசுகள் அவர்களை கவனிப்பதில்லை. அவர்கள் இந்திய தமிழர்கள் என்று வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர் அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவோ அவர்களை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கு இப்படி ஒரு லட்சக்கணக்கான மக்கள் இருப்புது கூட தெரியாது
ReplyDeleteஆம், துரதிஷ்டமாக உண்மை. இலங்கை இன்னும் ஓரளவுக்குத் தன்னும் வழமாக இருப்பதற்குக் காரணம் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பு. அதாவது அவர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டு ஒட்டுமொத்த இலங்கையும் பயனடைகிறது.
"வளமாக" என்றிருந்திருக்க வேண்டும்
ReplyDelete