தொடரும் மாணவர் போராட்டம் படைக்கும் சாதனைகள் பாரீர்!
தி.மு.க வேறு வழியின்றி மத்திய அரசில் இருந்து வெளியேறியுள்ளது. இது நாடகம் என ஜெயா அம்மையார் கூறுகிறார். முள்ளிவாயக்காலில் அவலம் நடந்த போது பதவி விலகாத கலைஞர் தற்போது விலகுவது அம்மையார் கூறுவது போல் நாடகமாக இருந்தாலும் கூட இதற்கு காரணம் தற்போது நடைபெறும் மாணவர் போராட்டம் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?
கலைஞர் வாபஸ் நாடகம் அரங்கேற்றி இருப்பதால் இனி அவரை முறியடிக்க ஜெயா அம்மையாரும் நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே இதுவரை மௌனம் சாதித்து வந்த சி.பி.எம் கம்யுனிஸ்ட் கட்சியும் வேறு வழியின்றி ராஜபக்ச மீது விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கை விட்டுள்ளது. இவ்வாறு இதுவரை துரோகம் பண்ணி வந்த அரசியல் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி இன்று இந் நிலைகளை எடுப்பதற்கு முழுக் காரணமும் மாணவர் போராட்டம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
தொடரும் மாணவர் போராட்டம் மக்களின் முழு ஆதரவைப் பெற்றதுடன் மக்களை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தி வருகின்றது. இதன் விளைவு மதுரையில் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார்.
சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரையும் நாளுக்கு நாள் போராட்டத்தில் ஈடுபடுத்திவரும் மாணவர் போராட்டம் உண்மையிலே பெருமை மிக்க சாதனைகள் படைத்து வருகிறது.

தீகுளித்து இறந்தவரின் தியாகம் மகத்தானது. அவரின் உணர்வுகள் பாராட்டப்பட வேண்டியது. அனால் இவ்வகையான மரணங்களுக்கு எதிரி இரங்கமாட்டான். எனவே இத்தகைய மரணங்களை தவிர்க்கும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteராஜீவ் காந்தி கொலைக்கு பின் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் எழுவதற்கு சாத்தியமில்லை என எழுதி வந்த ஆய்வாரள்கள் இன்றைய மாணவர் போராட்டம் கண்டு என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நிற்கின்றனர்.
ReplyDeleteவேறு வழியின்றி திருமாவளவனும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றி.
ReplyDeleteமுள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை பறி கொடுத்து இன்னொரு போராட்டத்தை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விரக்தி உற்றிருந்த இலங்கை தமிழர்களுக்கு “தாங்கள் அனாதைகள் அல்ல. தமக்காக குரல் கொடுக்க உலகில் அதுவும் இந்தியாவில் 5 கோடி மக்கள் இருக்கிறார்கள” என்ற செய்தி இந்த மாணவர் போராட்டம் மூலம் வந்துள்ளது. இதுவே இந்த மாணவர் போராட்டத்தின் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்.
ReplyDeleteதோழர் .பாலன் வணக்கம் , தங்களின் செய்தி மடலை வாசித்தேன் . தாங்கள் சொன்ன கருத்துக்களில் உடன் படுகிறேன் .இன்னும் மிகச்சரியாய் சொல்லவேண்டுமானால் "மக்கள் மட்டுமே இந்த உலகை மாற்றவல்ல சக்தி " என்ற மாக்சிய திசை வழி பாதையில் இன்றைய இளைஞர்கள் போராடுவதை பார்க்கும் பொது மாற்றம் வெகு தொலைவில் இல்லை ! என எல்லோரையும் யோசிக்க வைத்துள்ளது .
Deleteஇந்திய நாட்டின் போராளிகள் நாங்கள்தான் என்று மார்தட்டிகொள்ளுபவர்களுக்குத்தான் நெருக்கடி .......மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போகிறார்கள் .ஈழ மக்கள் அனுபவித்த துயரை , கண்ணால்,காதால்,கேட்டுறுக்கிறோம் அவ்வளவே ! அதனால் எங்கள் மதிப்பீடுகள் மீது வித்தியாசம் இருக்கலாம் . பாதிப்பை அனுபவிப்பவனுக்கும் , பாதிப்பை பற்றி கேட்பவனுக்கும் வித்தியாசம் இருக்கும் என்று நீங்கள் கூட நினைக்கலாம் . உண்மைதான் ! அதனால் எங்கள் ஆதரவும் ,எங்கள் உணர்வுகளும் பொய்யல்ல ! அதே நேரத்தில் நம்மை பொறுத்தவரை நடந்துவரும் போராட்டங்கள் சரியான வழியில் போகவேண்டுமேயோழிய .....யாரேல்லாம் எந்த முடிவு எடுகிறார்களோ ! அதையெல்லாம் சரியென்று வாதிடுவதல்ல ....எந்தளவுக்கு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து ஆதரிக்கும் மக்கள் அதே நேரத்தில். ஒரு புத்த பிச்சுவை ஓட ஓட விரட்டி அடிப்பது , தன்னைத்தானே தீ இட்டுகொள்வது இதையெல்லாம் போராட்டம்மென்றோ ...வீரமென்றோ ...தியாகமென்றோ ..ஏற்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை ! விபரம் தெரிந்தவர்களும் அவைகளை தடுக்க முயற்சி எடுக்காமல் அவர்களோடு சேர்ந்து கண்மூடித்தனமாக ஆதரிப்பதை நம்மால் ஏற்க முடியவில்லை !
நடக்கும் போரட்டத்தை குறைத்து மதிப்பிட்டு கொச்சைப்படுத்துவதாக அர்த்தமல்ல ! இந்திய அரசுக்கெதிராக ,.....இலங்கை பேரினவாத அரசுக்கெதிராக ....கிளர்ந்தெழும் எந்த ஒரு சின்ன முயற்சியையும் நாம் மனதார ஆதரிக்கிறோம் ! இந்த போரட்டங்காளால் நாம் , நினைக்கும் இலக்கைகூட அடைய முடியாமல் கூட போகலாம் ஆனால் உலக மக்களின் பார்வை இந்தியா மீது , பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது திருப்ப முடிந்து இருக்கிறது அது சாதாரண செய்தியல்ல .....சாதாரண முயற்சியல்ல ...அதே நேரத்தில் எல்லாமே தானாகவே நடக்வில்லை என்பதையும் நாம் அறிவோம் !
Tamil Eelam need you all, do not burn yourself please
ReplyDelete