• வரதராஜப் பெருமாள் மட்டுமல்ல
திருப்பதி பெருமாளே வந்து சொன்னாலும்
இனி இந்திய அரசை நம்புவதற்கு
ஈழத் தமிழர்கள் தயாரில்லை.
இந்திய அரசு தீர்வுக்கு உதவ முன்வந்ததாகவும் ஆனால் புலிகள் எந்த தீர்வையும் ஏற்க மறுத்துவிட்டதாக முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் கூறியிருக்கிறார்.
பெருமாள் அவர்களே!
(1)சமாதான தீர்வுக்கு புலிகள்தான் தடையாக இருந்தார்கள் எனில் புலிகள் அழிந்து 5 வருடம் ஆகிவிட்டதே. ஏன் இன்னும் எந்த தீர்வையும் இந்தியா பெற்று தரவில்லை?
(2)தமிழீழத்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் எதற்காக மாகாணசபை முதல்வராக இருந்தபோது தமிழீழ பிரகடனம் செய்தீர்கள்?
(3) இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எதற்காக தமிழீழ பிரகடனம் செய்த உங்களை இத்தனை ஆண்டுகள் பாதுகாத்தது?
(4)யுத்த வெற்றிக்கு இந்தியாவின் உதவியே பிரதான் காரணம் என்றும் இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்றும் இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர் அகியோர் கூறியிருக்கிறார்கள். அதனை இந்தியா இதுவரை மறுக்கவில்லை. அப்படி உண்மை இருக்கும்போது இந்தியா யுத்தத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று எதற்காக இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?
இறுதியாக பெருமாள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
உங்களின் வசதியான வாழ்வுக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறீர்கள். எனவே அதற்காக இந்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது உங்களுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் எந்த ஒரு ஈழத் தமிழனும் இந்திய அரசு செய்த துரோகத்தை மறக்கப்போவதும் இல்லை. அதனை இனி நம்பப் போவதும் இல்லை.
No comments:
Post a Comment