ஜெயா அம்மையார் தண்டிக்கப்படவாரா? அல்லது
காஞ்சி சங்கராச்சாரி போல் விடுதலை செய்யப்படுவாரா?
காஞ்சி சங்கராச்சாரி போல் விடுதலை செய்யப்படுவாரா?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் மன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் நிரபராதியான பேரறிவாளன் தண்டிக்கப்பட்டிருக்கிறார். குற்றவாளியான காஞ்சி ஜெயந்திரர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் இந்திய நீதியா?
நிரபராதியான பேரறிவாளனை விடுதலை செய்ய இந்திய அரசு மறுத்து மேன் முறையீடு செய்தள்ளது. ஆனால் காஞ்சி சங்கராச்சாரிகள் மீது மேன்முறையீடு செய்ய புதுவை அரசு மறுத்துள்ளது. இதுதான் இந்திய நீதியா?
ஜெயா அம்மையாரும் அவரது சகோதரி(!) சசிகலாவும் முறைகேடான வழிகளில் கோடிக்கணக்ணக்கான சொத்துக்கள் சேர்த்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அவ்வாறு சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிப்பதுடன் அவரும் அவரது சகோதரி சசிகலாவும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.
தற்போதைய மோடி அரசின் சட்ட அமைச்சர் ஜெயா அம்மையாரை தனிமையில் சந்தித்திருக்கிறார். எனவே நீதியான தீர்ப்பு வழங்கப்படாது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
பல வருடங்களாக விசாரணையை இழுத்தடித்த ஜெயா கும்பல் தற்போது இறுதி நேரத்தில் தீர்ப்பு கூறுவதையும் இயன்றளவு தள்ளிப்போட முயற்சி செய்துள்ளது.
புலிகளால் தனக்கு ஆபத்து என்று தனது சுய நலத்திற்காக புலிகள் மேல் பழி போட்ட ஜெயா அம்மையார் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
ஒருபுறம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக கூறி அவர்களை ராஜீவ்காந்தி வழக்கில் இருந்து இந்திய அரசு நீக்கியுள்ளது. மறுபுறம் பலிகளால் தனக்கு ஆபத்து என்று ஜெயா அம்மையார் இப்பவும் கறுப்பு பூனை பாதுகாப்பு வைத்திருப்பதுடன் மைசூர் நீதிமன்ற தீர்ப்புக்கு வர தனக்கு புலிகளால் ஆபத்து என்றும் கதை கூறுகிறார். அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட வேண்டும். சிறையின் கொடுமைகளை அவர் உணர வேண்டும்.
ஜெயா அம்மையாருக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பனையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இந்தியாவில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது உண்மையானால் ஜெயா அம்மையார் தண்டிக்கப்படுவதுடன் அவரிடமுள்ள சொத்துக்கள் பறிக்கப்பட வேண்டும்.
ஜெயா அம்மையார் தண்டிக்கப்படுவது தமிழக மக்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நல்ல விடமாயகவே இருக்கும்.
No comments:
Post a Comment