தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும் எனக் கூறுவதற்கு
ஒரு இந்திய தூதுவர் யாழ்ப்பாணத்தில் வேண்டுமா?
ஒரு இந்திய தூதுவர் யாழ்ப்பாணத்தில் வேண்டுமா?
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதுவர் ஒரு தமிழர். அவர் இந்தியாவில் உள்ள தமிழர்கள் இந்தி மொழியை கற்பது போல் இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்கள மொழியை கற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த சிங்கள மொழி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்ட வரலாறுகள் எல்லாம் நன்கு தெரிந்தும் வேண்டுமென்றே இந்த இந்திய தூதர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்மக்களை ஆயிரக் கணக்கில் அழித்த மகிந்த ராஜபக்ச கூட தமிழ்மக்கள் சிங்கள மொழியை கற்க வேண்டும் என இதுவரை கூறியதில்லை.
தீவிர சிங்கள இனவாத கட்சியான சிங்கள உறுமய கூட தமிழ் மக்கள சிங்கள மொழியை கற்க வேண்டும் என்று இதுவரை கூறியதில்லை.
ஆனால் தமிழ் மக்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றை பாதுகாக்கும் என நம்பி யாழ்ப்பாணத்தில் தூதுரகம் அமைக்க அனுமதித்தமைக்கு இந்திய தூதர் சிறந்த பரிசை தமிழ் மக்களுக்கு அளித்துள்ளார்.
தமிழனாக இருந்தாலும் இந்திய தூதுவர் தானும் இந்திய அரசு போல் தமிழ் இனத்திற்கு எதிரானவன் என்பதை நன்கு காட்டியுள்ளார்.
• யாழ்ப்பாணத்தில் ராணுவம் பெண்களை கற்பழிப்பது இந்த தூதுவரின் கண்களுக்கு தெரிவதில்லை.
• யாழ்ப்பாணத்தில் தங்கள் பிள்ளைகளின் விடுதலை கேட்டு தாய்மார் அழுவது இவரது செவிகளுக்கு கேட்பதில்லை.
• ஆனால் தமிழ் மக்கள் சிங்களம் கற்க வேண்டும் எனக் கூறுவதற்கு மட்டும் இவரால் எப்படி முடிகிறது?
யாழ் நகர பஸ் நிலையத்தில் கழிப்பறை விடயம் முதல் சென்ஜேன்ஸ் பள்ளியில் அனுமதி வரை அனைத்து விடயங்களிலும் இந்த இந்திய தூதுவர் தலையிடுகிறார்.
யாழ் குடாநாட்டில் ராணுவ ஆட்சி , மாகாணசபை ஆட்சி மட்டுமல்ல இந்த இந்திய தூதுவரின் ஆட்சியும் இருக்கிறது.
காலனிய ஆட்சியில் வெள்ளைக்கார துரைமார்கள் நடந்து கொண்டது போல் இலங்கை சிறிய தீவில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று இடங்களில் தூதரகம் அமைத்து “பெரியண்ணன்” ஆட்சி நடத்த முனைகிறது இந்திய அரசு.
சுதந்திர எண்ணம் கொண்ட மக்களின் முதல் வேலையாக இந்திய தூதரங்களை அகற்றும் கோசம் எழுப்ப வேண்டும்.
இந்த இந்திய துரைமார்களுக்கு சேவகம் செய்யும் எமது தமிழ் கங்காணிமார்கள் இனியாவது இந்த துரோகத்தை நிறுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் அவசியம்தானா? மக்களே சிந்தியுங்கள்!
No comments:
Post a Comment