• பல மாதங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது!
தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனை நினைவு கூரும் வண்ணம் செங்கல்பட்டில் ஏழுச்சி மாநாடு நடத்தியமைக்கு பழிவாங்கும் முகமாக பல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இவ் அராஜக செயலானது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே தர்மபுரியில் 6 இளைஞர்கள் மெரினா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அது தவறு என்று பல மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியும் தமிழ்நாடு அரசு அதனை இன்னும் வாபஸ் பெறவில்லை.
இந் நிலையில் பல மாங்களுக்கு முன்னர் மதுரையில் கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு தற்போது தேசியபாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது என்ற செய்தியானது தமிழக அரசு தன்னை ஒருபோதும் திருத்திக் கொள்ள போவதில்லை என்பதை நன்கு வெளிப்படுத்துகிறது.
தோழர் தமிழரசனை அடித்து கொன்றதன் மூலம் அவரது தமிழ்நாடு விடுதலைப் பாதையை நசுக்கிவிட முடியும் என தமிழ்நாடு அரசு கனவு கண்டது. ஆனால் அதன்பின் பல இளைஞர்கள் அவர் பாதையில் திரண்டு வருகின்றனர்.
தோழர் தமிழரசன் பாதையில் திரண்டு வரும் இளைஞர்களை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக தமிழ்நாடு அரசு கறுப்பு சட்டங்களை போட்டு மிரட்டுகிறது.
எந்தளவு ஒடுக்குமுறை நடக்கிறதோ அதற்கு எதிராக அதிகளவு போராட்டம் வெடிக்கும்.
எனவே தமிழ்நாடு அரசு புரட்சியாளர்களை நசுக்க நசுக்க அதற்கு எதிராக மக்கள் மேலும் மேலும் புரட்சியாளர்களாக மாறுவர்.
இதுவே உலக வரலாறு.

No comments:
Post a Comment