• இந்தியா தலையிட்டிருந்தால் 40 ஆயிரம் தமிழர் காப்பாற்றப்பட்டிருப்பார்களா? அல்லது இந்தியா தலையிட்டதால்தான் 40 ஆயிரம் தமிழர் கொல்லப்பட்டார்களா?
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதியில் இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் 40 ஆயிரம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என முன்னாள் ஜ.நா மனிதவுரிமைத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------
கலைஞர் கருணாநிதி அவர்களே!
-----------------------------------------------------------------------------------------
கலைஞர் கருணாநிதி அவர்களே!
எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். நவநீதம்பிள்ளை அம்மையாரின் கூற்றுக்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.
நீங்களும் இந்திய அரசும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறிவந்தீர்கள். 3 மணி நேர உண்ணாவிரத நாடகமும்கூட ஆடினீர்கள்.
ஆனால் இப்போது நவநீதம்பிள்ளை அம்மையார் நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.
இனி இதற்கு என்ன கூறப்போகிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
ஆனால் இந்தியாவே அனைத்து உதவிகளையும் வழங்கி தலையிட்டதால்தான் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.
மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் ஆட்சியானாலும், மோடியின் பி.ஜே.பி ஆட்சியானாலும் இலங்கை அரசுக்கு உதவி வருவதும் ஜ.நா வில் இலங்கை அரசைக் காப்பாற்றி வருவதும் யுத்தத்தில் தலையிட்டதால்தானே.
இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு அனைத்து வழிகளிலும் உதவி வழங்கிய இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் என இன்னமும் சிலர் நம்பும் முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
No comments:
Post a Comment