• தவறு தலைவர்களிலேயேயொழிய மக்களில் இல்லை
ஈழத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்த கூட்டம் கூடவில்லை?
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்த கூட்டம் கூடவில்லை?
600 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்த கூட்டம் கூடவில்லை?
என்று நடிகை நயன்தாராவை காண வந்த கூட்டம் மீது சிலர் எரிச்சல்படுகின்றார்கள்.
ஆனால் நாம் அவ்வாறு இதனை பார்க்கவில்லை. மாறாக ஒரு நடிகையை பார்க்க இத்தனை ஆவலாக வந்தவர்கள் தமது பிரச்சனைக்காக வரமாட்டார்களா என்றெ கேட்கிறோம்.
நிச்சயம் வருவார்கள். ஏனெனில்
இந்த மக்கள் மத்தியில் இருந்துதானே தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் தோன்றினார்
இந்த மக்கள் மத்தியில் இருந்து வந்த தோழர் மாறன்தானே கொடைக்கானலில் வெடிகுண்டு வைத்து வீர மரணம் அடைந்தார்.
இந்த மக்கள் மத்தியில் இருந்தானே அப்துல் ரசீக் தோன்றி தன்னையே எரித்து மாண்டான்.
இந்த மக்கள மத்தியில் இருந்துதானே தன்னையே எரித்து பேரறிவாளனைக் காப்பாற்றிய செங்கொடி வந்தாள்.
இந்த மக்கள் மத்தியில் இருந்துதானே ஈழத் தமிழர்களுக்காக தங்களையே எரித்த 16 தியாகிகள் வந்தார்கள்.
எனவே இவ்வாறு வந்த மக்கள் கூட்டம் தமது பிரச்சனைகளுக்காக திரண்டு வரவில்லையெனில் தவறு அவர்களிடம் இல்லை. மாறாக தலைவர்களிடமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
போலித் தலைவர்களின் துரோகங்களினால் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள் என்பதே உண்மை. எனவே நம்பிக்கையான தலைமையை உருவாக்குவோம்.
மக்களே மகத்தான சக்தி.
மக்களே வரலாற்றை உருவாக்கும் சக்திகள்.
மக்களே வரலாற்றை உருவாக்கும் சக்திகள்.
No comments:
Post a Comment