• இந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
17 வயது சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள சவூதிஅரேபியாவுக்கு ஜ.நா மனிதவுரிமை தலைமைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இச் சிறுவனை சிலுவையில் அறைந்து தலை துண்டிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சிறுவன் எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிறையில் தனது வக்கீலை சந்திக்கக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை என மனிதவுரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதுமட்டுமல்ல சிறையில் இச் சிறுவன் துன்புறுத்தப்பட்டதாகவும் தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக அப்பீல் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
இத்தகைய கொடுமையை இழைக்கும் சவூதி அரேபியாவுக்கு ஜ.நா மனிதவுரிமை தலைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவி வழங்கப்பட்டவுடன் சவூதி அரேபியா கடவுள் மறுப்பாளர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு தலைமைப்பதவி வழங்கியமைக்காக கவலைப்படுவதா? அல்லது
நலலவேளை இலங்கைக்கு வழங்கப்படவில்லை என ஆறுதல்படுவதா?
நலலவேளை இலங்கைக்கு வழங்கப்படவில்லை என ஆறுதல்படுவதா?
அடிப்படை மனிதவுரிமைகளை மறுக்கும் சவூதி அரேபியாவுக்கு மனிதவுரிமை தலைமைப்பதவி!
குற்றம் செய்த இலங்கை அரசே குற்றத்தை விசாரிக்கும் நீதிபதியாக இருக்கலாம் என்று சிபாரிசு!
வர வர இந்த ஜ.நா செய்யும் தமாஸ்க்கு ஒரு அளவேயில்லாமல் இருக்கிறது!
இன்னும் என்னென்ன கொடுமையை எல்லாம் காணவேண்டி வருமோ தெரியவில்லை!
No comments:
Post a Comment