Wednesday, September 30, 2015

தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது பொலிஸ் சர்வாதிகார ஆட்சியா?

• தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா?
அல்லது பொலிஸ் சர்வாதிகார ஆட்சியா?
செய்தி- பொலிசை விமர்சிப்பவன் யாராக இருந்தாலும் உடனே பிடித்து சிறையில் அடையுங்கள்- பொலிஸ் அதிகாரி வெள்ளைத்துரை திமிர் பேச்சு
பொலிஸ் "என்கவுண்டர்" கொலை செய்யலாம்!
பொலிஸ் "லாக்கப்பில்" கொலை செய்யலாம்!
பொலிஸ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைக்கலாம்!
பொலிஸ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யலாம்!
பொலிஸ் பெண் அதிகாரி தற்கொலை செய்யலாம்!
பொலிஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கலாம்!
அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஊழல் செய்யலாம்!
ஆனால் அவர்களை ஒருவரும் விமர்சிக்க கூடாதாம்!!
பொலிஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
பொலிஸ் தவறுகளை யாரும் தட்டிக் கேட்கக்கூடாதா?
ஜெயா அம்மையார் பதவிக்கு வரும்போதெல்லாம் பொலிசார் சர்வாதிகாரிகளாக நடக்கும் மர்மம்தான் என்னவோ?
சட்டத்தை காக்க வேண்டிய பொலிசாரே சட்டத்தை மதிக்காமல் சர்வாதிகாரமாக நடந்தால் அப்புறம் சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு? நீதிபதிகள் எதற்கு?
கருத்து சுதந்திரம் என்பது அரசியல் அமைப்பு சட்ட மூலமாக இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. இந்த உரிமையை மக்கள் போராடியே பெற்றிருக்கிறார்கள்.
மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வெள்ளைத்துரை போன்றவர்களை அனுமதிக்க கூடாது.
மக்கள் விழிப்புணர்வுடன் இவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

No comments:

Post a Comment