Wednesday, September 30, 2015

• இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?

• இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
தேவலோகத்தில் ஒரு நாள் உமாதேவியார் குளிக்கச் சென்றாராம். அப்போது அவர் தனது உடலில் உள்ள ஊத்தையை வளித்து உருட்டி காவலுக்கு வைத்தாராம். அவ்வேளை சிவபெருமான் அங்கே வந்தாராம். அவரை யார் என்று அறியாத அந்த ஊத்தை சிவபெருமானை உள்ளே விடாமல் தடுத்ததாம். உடனே கோபம் கொண்ட சிவபெருமான் அந்த ஊத்தையின் தலையை வெட்டி எறிந்தாராம். இதனைக் கண்ட உமாதேவியார் அது தனது மகன் என்றும் அதன் தலையை வெட்டிவிட்டீர்களே என்று கவலை கொண்டாராம். உடனே சிவபெருமான் அருகில் சென்றுகொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி அந்த ஊத்தையில் பொருத்தினாராம். அந்த யானை முகம் கொண்ட ஊத்தையே பிள்ளையார் என அழைக்கப்படுகிறது. அதுவே விநாயகர் சதூத்தி என கொண்டாடப்படுகிறது.
இங்கு எனது கேள்வி என்னவெனில் சிவபெருமான் உமாதேவியாரின் திருவிளையாடலுக்காக அநியாயமாக ஒரு யானையின் தலையை வெட்டிவிட்டார்களே! யானைக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநியாயத்தை யார் கேட்பது?
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே ஆறாவது அறிவான பகுத்தறிவு கொண்டுள்ளான் என கூறுகின்றனர். அப்படிப்பட்ட மனிதன் இப்படியான ஊத்தைக் கதைகளை பக்தியின் பெயரால் "விநாயகர் சதுர்த்தி" என கொண்டாடும் முட்டாள் தனத்தை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment