•எல்லாளன் எழுதிய “ ஒரு தமிழீழ போராளியின் நினைவுக் குறிப்புகள்” நூல்
TELO இயக்கத்தில் போராளியாக இருந்த எல்லாளன் இராஜசிங்கம் அவர்கள் எழுதி “முன்னணி” வெளியீடாக வந்திருக்கும் நூல் இது.
எல்லாளன் தனது இயக்க மற்றும் போராட்ட அனுபவங்களை “சரிநிகர்” பத்திரிகையில முதலில் தொடராக எழுதியிருந்தார்.
பின்னர் இத் தொடர் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு “தமிழரங்கம்” இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தற்போது, போராட்ட வரலாற்றின் ஆவண தேவை கருதி “முன்னணி” பதிப்பகத்தால் நூல் வடிவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தனது அனுபவங்களை எழுதியிருக்கும் எல்லாளன் அவர்களும் அதனை நூலாக வெளியிட்டிருக்கும் முன்னணி பதிப்பகத்தின் பணிகளும் பாராட்டுக்குரியவை.
TELO இயக்கத்தின் தலைமையில் நடந்த ரமேஸ், சுதன் பிரச்சனை மற்றும் மனோ மாஸ்டர் பற்றிய தனது அறிதல்களை இந் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
எல்லாளன் தனது நூலில் குறிப்பிடுகிறார் “ எமது விடுதலைப் போராட்டத்தில் கறைபட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அவை வரலாற்று பதிவுகளாக எழுதப்பட வேண்டும். குறைந்தளவு எந்தளவு போராளிகள் உயிர் நீத்தார்கள் என்றுகூடத் தெரியாத நிலைதான் உள்ளது. அதில்கூட மற்றைய இயக்கங்களில் எந்தவிதமான பதிவுகளும் இல்லாத நிலையில் இயக்கம் நடத்தகிறார்கள். அதற்கு முன்னோடியாகத்தான் இதைப் பதிவு செய்கிறேன். இதன் மூலம் என்னைப் போல பலரையும் எழுத வைக்கும் என்ற நம்பிக்கையில் இதை முடிக்கிறேன்”
எல்லாளன் குறிப்பிட்டது போன்று எமது போராட்டம் குறித்த எழுத்துகள் நிறைய வரவேண்டும்.
போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் தமது அனுபவங்களை எழுத்தில் தர வேண்டும்.
No comments:
Post a Comment