•நம்பிக்கையளிக்கும் கண்டனங்கள்!
இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை அல்ல என்ற எழுத்தாளர் ஜெயமோகன் கூற்றுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக எழுத்தாளர் சோபாசக்தி தகுந்த சான்றுகளுடன் ஒரு நல்ல பதிலை வழங்கியுள்ளார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய பதிவு அது.
அதேபோன்று எழுத்தாளர் குணா கவியழகன் பகிரங்க விவாதத்திற்கு ஜெயமோகனை அழைத்துள்ளார்.
பிரான்சில் உள்ள எழுத்தாளர்கள் அனைத்து எழுத்தாளர்களையும் திரட்டி ஒரு கண்டன வெளியீடு செய்வதற்கு முயல்கிறார்கள் என அறிய வருகிறது.
பிரிந்து கிடந்த ஈழத்து எழுத்தாளர்கள் இவ் விடயம் குறித்து ஓரணியில் திரண்டிருப்பது மகிழ்சி அளிக்கிறது. நம்பிக்கை அளிக்கிறது.
நடந்தது இனப்படுகொலை என்று கூறமுடியாது என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு சுமந்திரன் கூறியபோதே இப்படியான எதிர்ப்பை காட்டியிருந்தால் ஜெயமோகனுக்கு இப்படி சீண்டிப் பார்க்கும் தைரியம் வந்திருக்காது.
ஜெயமோகன் சுட்டிக்காட்டிய மேலும் இருவிடயங்களுக்கும் நாம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
முதலாவது, இலங்கை ராணுவம் 40 ஆயிரம் தமிழர்களை மட்டுமல்ல 1989ல் 60 ஆயிரம் சிங்களவர்களையும் கொன்றுள்ளது என்று கூறியுள்ளார்.
இரண்டாவதாக, இந்தியாவில் நக்சலைட்டுகளை கொன்று அழித்தது போலவே இலங்கையில் புலிகள் கொன்று அழிக்கப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
எனவே இனிமேல் நாம் ஈழப் படுகொலைகளை பேசும் அதேவேளை இந்திய படுகொலைகள் குறித்தும் பேசியேதான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது தேவாரம் தலைமையிலான பொலிசார் 40 க்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களை நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி கொன்றனர்.
இன்றும்கூட பச்சை வேட்டை என்னும் பெயரில் நக்சலைட்டுகளை ஒழிப்தாக கூறி அப்பாவி ஆதிவாசி மக்களை இந்திய அரசு கொன்று வருகிறது.
இனிமேல் ஈழத்து எழுத்தாளர்ககள் இந்த இந்திய படுகொலைகள் குறித்தும் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு ஜெயமோகன் வழி வகுத்துள்ளார்.
No comments:
Post a Comment