•இந்தியாவின் “எட்கா” ஒப்பந்தமும் இலங்கை தலைவர்களும்!
“எட்கா” என்னும் அடிமை ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா சகல வழிகளிலும் முயற்சி செய்கிறது.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது “எட்கா” ஒப்பந்தத்தை எதிர்த்த ரணில் அவர்கள் இப்போது பிரதமரானவுடன் அதே ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயல்கிறார்.
ஜனாதிபதியாக இருந்தபோது “எட்கா” ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி செய்த மகிந்த ராஜபக்ச இன்று எதிர்க்கட்சியானவுடன் அதே “எட்கா” ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.
இவர்கள் இருவரும் தமது பதவி நலன் கருதியே குரல் கொடுக்கின்றனரேயொழிய மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை.
“எட்கா” ஒப்பந்தத்தின் கொடூர விளைவுகள் குறித்து ஜே.வி.பி , முன்னிலை சோசலிசக்கட்சி மற்றும் புத்திஜீவிகள் சிங்கள மக்களுக்கு விளக்கி வருகின்றனர்.
ஆனால் தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கு எதிராக வாய் திறக்கவே பலர் அஞ்சுகின்றனர்.
நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் இந்த ஒப்பந்தம் குறித்து மக்கள் மத்தியில் பேசாது துரோகத்தை இவர்கள் இழைக்கிறார்கள்.
இந்தியாவின் அறிவிக்கப்படாத 30வது மாநிலமாக முழு இலங்கையும் இவ் ஒப்பந்தம் மூலம் மாறும் அபாயம் உருவாகியுள்ளது.
தலைவர்களைப் பொறுத்தவரையில் தமது பதவி நலன்களுக்காகவும் இந்தியா வழங்கும் அற்ப சலுகைகளுக்காவும் மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள்.
எனவே மக்கள் இந்த துரோகத் தலைவர்களை தூக்கியெறிந்துவிட்டு இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டும்.
No comments:
Post a Comment