•வெற்றி செல்வி எழுதிய “ஆறிப்போன காயங்களின் வலி”
18 வருடங்கள் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்த வெற்றி செல்வி அவர்களின் ஏழாவது படைப்பே இந்த நூல்.
பம்பைமடுவில் அமைந்திருந்த புனர்வாழ்வு தடுப்புமுகாமில் தாம் அனுபவித்த வலிகளை இதில் அவர் பதிவு செய்துள்ளார்.
29 தலைப்புகளில் 180 பக்கத்தில் தன்னுடைய மற்றும் சிலரின் தடுப்புமுகாம் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
புனைவுகள் கலந்து நாவலாக எழுதாமல், நேரிடையாக நேர்மையாக அவர் எழுதியிருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.
தடுப்புமுகாமில் இருந்து வெளிவரும்போது தனது மனநிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார் “என் சனங்களின் அளவற்ற கண்ணீரை என்னால் துடைக்க இயலாமல் இருக்கலாம். என்றாலும் அதற்காகவே வாழவும் வேண்டும். தோற்றுப் போனவர்களின் அடையாளமாக அல்லாமல் சாதனைப் படிகளைக் கடக்கும் துணிவுடன் முன்னேறியே ஆக வேண்டும். யாருக்கும் பின்னால் அல்ல. எல்லோருக்கும் முன்னால் செல்ல வேண்டும்”
இத்தனை வலிகளுக்கு பின்னரும் இனியும்கூட தமிழ் மக்களின் துயர் துடைக்க வாழவேண்டும் என்று அவர் எழுதியது அவரது உணர்வை மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக மற்றவர்களும் எத்தகைய உணர்வுடன் எழுதவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக முன்மாதிரியாக அமைந்துள்ளது.
பாராட்டுகள் வெற்றி செல்விக்கு.
No comments:
Post a Comment