•காஸ்மீர் மனிதவுரிமை மீறல்களை சுட்டிக்காட்டுவது தேசவிரோத குற்றமா?
காஸ்மீரில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் 60 மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுளனர்.
கொடிய பெல்லட் குண்டால் பலரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
பல பெண்கள் ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுவரை 97ஆயிரம் காஸ்மீர் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள் ராணுவத்தின் மேல் போடப்பட்டுளன.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள மனிதவுரிமைவாதிகள் காஸ்மீர் மனிதவுரிமை மீறல்களை கண்டிக்கின்றனர்.
சர்வதேச மன்னிப்புசபை (அம்னஸ்டி இண்டர்நேசனல் சென்டர்) உலகம் பூராவும் நிகழும் மனிதவுரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வரும் ஒரு அமைப்பு அகும்.
இது பெங்களுரில் ஒரு நிகழ்வில் காஸ்மீரில் பாதிக்கப்பட்ட சிலரை அழைத்து வந்து அவர்களது அனுபவங்களை கூறவைத்துள்ளது.
இதற்காக சர்வதேச மன்னிப்பு சபை மீது தேசவிரோத வழக்கு இந்துத்துவ அமைப்புகளால் போடப்பட்டுள்ளது.
மோடி பிரதமரான பின்பு,
முதலில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம்களை தாக்கினார்கள்.
அடுத்து மாட்டு தோல் உரித்ததாக தாழ்த்தப்பட்ட சாதி மக்களை தாக்கினார்கள்.
இப்போது சர்வதேச மன்னிப்பு சபை மீதே தேசவிரோத வழக்கு போடுகிறார்கள்.
இந்தியா தன் சகிப்புத் தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.
அது இந்துத்துவ பாசிசத்தை நோக்கி படு வேகமாக நகருகிறது.
No comments:
Post a Comment