•பாம்பிற்கு பால் வார்த்த சுமந்திரன்.
குண்டு வெடித்தவுடன் மட்டக்களப்பு சென்ற சுமந்திரன் அங்கு ஹிஸ்புல்லாவை சந்தித்து பேசியது மட்டுமன்றி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.
அந்த போட்டோ முகநூலில் பலரால் பகிரப்பட்டது. அதுமட்டுமல்ல குண்டு வெடிப்பில் ஹிஸ்புல்லாவுடன் சுமந்திரனுக்கும் பங்கு என்று வேற எழதினார்கள்.
இதனால் வேறு வழியின்றி சுமந்திரன் பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாவைக் காட்டிக் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியேற்பட்டது.
ஹிஸ்புல்லாவுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
நல்ல விடயம். சுமந்திரன் இவ்வாறு கேட்டிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதே.
ஆனால் இங்கு எமது சந்தேகம் என்னவெனில் ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் சுமந்திரனுக்கு எப்படி தெரியாமல் போனது?
அல்லது தொடர்பு இருப்பது தெரிந்துதான் அவரை மட்டக்களப்பில் சந்தித்தாரா?
அல்லது ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் தெரிந்துதான் இவரும் சம்பந்தர் அய்யாவும் ஆதரவு தெரிவித்தார்களா?
பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளவருக்கு ஆளுநர் பதவி கொடுக்க வேண்டாம் என்று இவரும் சம்பந்தர் அய்யாவும் அரசை வற்புறுத்தியிருக்க வேண்டாமா? ஏன் அப்படி செய்யவில்லை?
சரி. இதை விடவும். அடுத்த விடயத்தை பார்ப்போம்.
சிவசேனை என்னும் இந்துமத அடிப்படைவாத இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தை இந்திய உளவு நிறுவனமே அனுப்பி வைத்தது.
அவரை இந்திய உளவு நிறுவனமே அனுப்பி வைக்கிறது என்பதும் அவர் தமிழ் மக்கள் மத்தியில் மத மோதல்களை உருவாக்கப் போகிறார் என்பதும் நன்கு தெரிந்தும் சுமந்திரன் அவருக்கு ஆதரவு கொடுத்தார்.
கிழக்குமாகாணத்தை சேர்ந்த தமிழரசுக்கட்சி எம்.பி ஒருவர் பகிரங்கமாகவே இந்த சிவசேனை சச்சிதானந்தத்திற்கு முழு ஆதரவை வழங்கினார்.
அவரும் ஆரம்பத்தில் கிழக்குமாகாணத்தில் தமிழ் முஸ்லிம்களிடையேதான் மோதல்களை உருவாக்க முனைந்தார். அது எதிர்பார்த்த வெற்றி அளிக்கவில்லை என்றவுடன் இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்க இணங்க இந்து மற்றும் கிருத்தவ தமிழ் மக்களிடையே மோதல்களை உருவாக்க ஆரம்பித்து விட்டார்.
அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற மத மோதல்களின் பின்னணியில் இந்த சிவசேனை சச்சிதானந்தமே இருக்கிறார். அதுமட்டுமல்ல இது தொடர்பாக அவர் சுமந்திரன் மீது பகிரங்கமாக பழி சுமத்தியுள்ளார்.
சுமந்திரன் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்துள்ளார் என்று நாம் பலமுறை குற்றம் சாட்டியிருக்கிறோம். ஆனால் அவர் கிருத்தவ மதத்திற்கு ஆதரவாக இந்துக்களுக்கு துரோகம் செய்கிறார் என்று ஒருபோதும் கூறியதில்லை.
ஆனால், சுமந்திரன் மனைவி ஒரு லண்டன் கிருத்தவ மத தொண்டு நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபா சம்பளத்தில் பணிபுரிவதாக சச்சிதானந்தம் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல இந்த கிருத்தவ மத தொண்டு நிறுவனம் தமிழ் மக்களை மத மாற்றம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோன்று பல குற்றச்சாட்டுகளை சுமந்திரன் மீது இந்த சிவசேனை சச்சிதானந்தம் கூறியுள்ளார்.
பாம்புக்கு பால் வார்த்தாலும் அது விஷத்தையே கக்கும் என்பதை இப்போது சுமந்திரன் புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறோம்.
ஹிஸ்புல்லா மீது மட்டுமல்ல இந்த சிவசேனை சச்சிதானந்தம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமந்திரன் கோர வேண்டும். கோருவாரா?
No comments:
Post a Comment