குட்டிமணி தங்கத்துரை அகியோர்
பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்களா?
பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்களா?
இன்றைய நாளில்தான் (05.04.1981)குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்ட நாள் ஆகும்.
அன்று முதல் இவர்களை காட்டிக் கொடுத்தது பிரபாகரனே என்று சிலர் கூறிவருகிறார்கள்.
அண்மையில்கூட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கறிஞரும் இதனை சமூகவலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் இவ்வாறு கூறுவதற்கு முன்வைக்கும் ஒரே ஆதாரம் குட்டிமணியும் தங்கத்துரையும் இந்தியா செல்லும் விடயம் பிரபாகரனுக்கு மட்டுமே தெரியும் என்பதுதான்.
இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா?
(1) காட்டிக் கொடுத்தார் என்றால் எப்படி? எப்போது? என்ற விபரங்கள் கூறவேண்டும். அந்த காலத்தில் கைத்தொலைபேசிகள் இல்லை. எனவே காட்டிக்கொடுப்பதென்றால் நேரில் சென்று கூறவேண்டும் அல்லது கடிதம் போட வேண்டும். அல்லது இன்னொரு நபர் மூலம் காட்டிக் கொடுத்தது என்றால் அந்த இன்னொரு நபர் யார் என்பதையாவது கூறவேண்டும். இதுவரை இதுபற்றி எந்த விபரமும் யாரும் தெரிவிக்கவில்லை.
(2) குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை கைது செய்து முதலில் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில்தான் வைத்திருந்தார்கள். அவர்களை யாரோ கடத்தல்காரர்கள் என்று நினைத்து சாதாரண காவலில் வைத்திருந்தார்கள். அப்புறம் அங்கு வந்த ஒருவர் இவர்களை இனங்காட்டிய பின்பே அவர்கள் குட்டிமணி தங்கத்துரை என்பதை பொலிஸ்காரர்கள் தெரிந்துகொண்டார்கள். அதன்பின்பே அதிக காவல் போடப்பட்டது. இங்கு எமது கேள்வி என்னவெனில் பிரபாகரன் காட்டிக்கொடுத்து பிடிபட்டது என்றால் முதலே குட்டிமணி தங்கத்துரை என்று தெரிந்து அதிக காவல் போட்டிருப்பார்கள் அல்லவா?
(3) குட்டிமணி தங்கத்துரை ஆகியோரை காட்டிக் கொடுக்கும் அளவிற்கு அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் முரண்பாடு எதுவும் இருந்ததாக இதுவரை அவர்களுடன் இருந்தவர்கள் எவரும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு பிரபாகரன் மீது ஆதாரம் இன்றி குற்றம் சுமத்துவோர் குட்டிமணி தங்கத்துரை கொலைக்கும் பிரபாகரனே காரணம் என்று கூறுகின்றனர்.
குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படியிருக்க இவர்கள் படுகொலைக்கு பிரபாகரன் எப்படி காரணமாக இருக்க முடியும்?
குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களை சிறையில் இருந்து மீட்க ரெலோ அமைப்பினர் திட்டம் தீட்டியதாகவும் அதற்காக ஒரு குழவினர் இந்தியாவில் பயிற்சி எடுத்ததாகவும் கூறுகின்றனர்.
எனவே அதுவரை எந்த தாக்குதலிலும் ஈடுபட வேண்டாம் என பிரபாகரனை நேரில் சந்தித்து கூறியதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனையும் மீறி பிரபாகரன் திண்ணைவேலியில் 13 ராணுவத்தினரை கொன்று அதன்மூலம் குட்டிமணி தங்கத்துரையும் கொன்றுவிட்டார் என இவர்கள் கூறுகின்றனர்.
(1) பிரபாகரனுக்கு நேரில் கூறப்பட்டமையும் அல்லது அவர் அதற்கு சம்மதித்தார் என்பதும் எந்தளவு உண்மை என்று அறிய முடியவில்லை.
(2) அது உண்மையாக இருந்து அதனை பிரபாகரன் மீறியிருந்தால் அது தவறுதான்.
(3) ஆனால் 13 ராணுவத்தினரை கொன்று அதன்மூலம் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்படுவதற்கு பிரபாரன் திட்டமிட்டார் என்பது ரொம்பவும் ஓவர்.
(4) ஏனெனில் 13 ராணுவத்தினரைக் கொன்றால் அதனால் சிறையில் இருக்கும் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்படுவார்கள் என்பது பிரபாகரனுக்கு மட்டுமல்ல அப்போதிருந்த எந்த அரசியல தலைவருக்கும் தெரியாது.
எனவே குட்டிமணி தங்கத்துரை போன்றவர்களை காட்டிக் கொடுத்தும் கொல்லப்பட்டமைக்கும் பிரபாகரன் காரணம் என்பது அதாரம் அற்ற குற்றச்சாட்டு ஆகும்.
குறிப்பு- இது பிரபாகரனை நியாயப்படுத்தும் பதிவு இல்லை. எனக்கு தெரிந்த நியாயத்தை கூறியிருக்கிறேன். எனவே கம்பு சுத்த வருபவர்கள் தயவு செய்து பதிவை நன்கு படித்தவிட்டு வரவும்.
No comments:
Post a Comment