Wednesday, April 29, 2020
நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!
நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!
இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பிரதி அமைச்சரும்கூட.
தற்போது இவர் பதவியில் இல்லை. ஆனாலும் மக்களுக்கு சேவை செய்வதில் எப்பவும்போல் இருக்கிறார்.
ஏழை மக்களுக்கு உதவ என்று தானே உணவு சமைத்து எடுத்துச் சென்றார்.
ஆனால் பொலிசார் அனுமதிக்கவில்லை. இவர் ஜதேக கட்சியை சேர்ந்தவர்.
எனினும் உடனே இவர் மகிந்தவின் மகன் நாமலுடன் தொடர்பு கொண்டு தன் நிலையை விளக்கி அனுமதி பெறுகிறார்.
இவர் சிங்கள இனத் தலைவர். இப்படி ஒரு தலைவர் தமிழ் மக்களுக்கு இல்லையே என எம்மை ஏங்க வைக்கிறார்.
ஏனெனில் எமது தலைவர்கள் பதவி கிடைத்ததும் நீண்ட உறக்கத்திற்கு சென்று விடுகிறார்கள்.
தேர்தல் அறிவித்தால் மட்டுமே உறக்கத்தில் இருந்து எழுந்து வந்து அறிக்கை விடுகிறார்கள்.
எமது தலைவர்களும் மகிந்தவுடனும் அவர் மகன் நாமலுடனும் தொடர்பு கொள்கிறார்கள்.
ஆனால் அது தமக்கு சொகுசு பங்களா மற்றும் வாகனம் பெறுவதற்காகவே தொடர்பு கொள்கிறார்கள்.
இவர் மக்களுக்கு உதவுவதற்காக பொலிசாரை மீறுகிறார். ஆனால் எம் தலைவர்கள் அந்த பொலிசார் பாதுகாப்பு இல்லை என்றால் மக்கள் மத்தியில் வரமாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள்.
என்ன செய்வது? நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment