Wednesday, April 29, 2020
தொடரும் தற்கொலைகள்?
• தொடரும் தற்கொலைகள்?
யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தற்கொலைகள் பற்றிய செய்திகள் மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கின்றன.
இதோ மேலும் இரண்டு முதியவர்களின் தற்கொலைச் செய்திகள் வந்துள்ளன.
ஏழாலையில் ஒரு முதியவர் தனக்கு தீமூட்டி தற்கொலை செய்தள்ளார். அதேபோன்று அல்வாயில் ஒரு முதியவர் அதுவும் ஏழு பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார்.
இளையவர்கள் மட்டுமன்றி முதியவர்கள்கூட தற்கொலை செய்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.
லண்டனில் தினமும் கொரோனாவினால் சுமார் 800 பேர் மரணமடைகின்றனர். இதுவரை இருபதாயிரம் பேர் இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
ஆனால் இதுவரை ஒருவர்கூட லண்டனில் தற்கொலை செய்ததாக செய்தி வரவில்லை.
லண்டனில் மட்டுமல்ல பிரான்ஸ் சுவிஸ் கனடா போன்ற நாடுகளில் தமிழர்களும் கொரோனாவினால் இறந்துள்ளனர்.
ஆனால் இங்கு வாழும் ஒரு தமிழர்கூட தற்கொலை செய்யவில்லை.
இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் ஏன் இந்தளவு அதிக தற்கொலைகள் இடம்பெறுகின்றன?
லண்டனில் கறுப்பர்கள் அதிகளவு இறப்பது குறித்து லண்டன் மேயர் கருத்து தெரிவித்துள்ளார். அரசும் அதுகுறித்து பொறுப்புகூட முன்வந்திருக்கிறது.
அதேபோன்று இலங்கையில் தமிழர்களின் இம் மரணம் குறித்து பொறுப்புகூற இலங்கை அரசு முன்வருமா?
குறைந்தபட்சம் யாராவது தமிழ் அரசியல்வாதியாவது இதன் மீது அக்கறை காட்டுவாரா?
Image may contain: 1 person, standing
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment