•250 நாட்கள்
இது நடிகர் விஜய் இன் மெர்சல் படம் அல்ல. இங்கு கட்டப்பட்டிருப்பதும் நடிகரின் 35 அடி கட்வுட்டும் அல்ல.
இது கேப்பாப்புலவு மக்களின் போராட்டம். தமது சொந்த நிலம் தமக்கு வேண்டும் என்ற அவர்களின் குரலே கட்அவுட்டாக தொங்கிறது.
250 நாட்களாக ராணுவ முகாம் முள்ளுக்கம்பி வேலி அருகே படுத்துறங்கி போராடி வருகிறார்கள்.
ஒருபுறம் கொட்டும் மழை. மறுபுறம் தூவனம். நிலம் ஊறுகிறது. இரவில் நுளம்புக்கடி தொல்லை. இத்தனைக்கும் நடுவே குழந்தைகள்கூட போராடுகின்றன.
ஆனால், இங்கே குழந்தை மழை நீரில் கிடந்து போராடுகிறது. அங்கே சம்பந்தர் அய்யா இரண்டாவது சொகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடிக்க 5 கோடி ரூபா அரசிடம் பெறுகிறார் என்று நான் இப்பொழுது எழுதப் போவதில்லை.
அல்லது, இங்கே மக்கள் தமது சொந்த நிலம் கேட்டு போராடுகிறார்கள். அங்கே மாவை சேனாதிராசா தமது சொந்த நிலத்தை மீட்டு சின்ன வீடு 3 கோடி ரூபா செலவில் கட்டி வருகிறார் என்றும் எழுத விரும்பவில்லை.
அல்லது, தமிழ் குழந்தை இங்கே தண்ணீரில் கிடந்து போராடுகிறது. அங்கே சுமந்திரன் பிள்ளைள் சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் அரச ஜீப் வண்டியில் நீச்சல் குளம் செல்கிறார்கள் என்றும் சட்டிக்காட்ட நான் விரும்பவில்லை.
ஏனென்றால் நான் இவ்வாறு எழுதினால் சம்பந்தர் அய்யா, சுமந்திரன், மாவை சோனாதிராசாவுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவர்களது செம்புகளுக்கு கோபம் வருகிறது.
எனவே இம்முறை நான் அவ்வாறு எழுதாமல் உங்களின் மனட்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
250 நாட்களாக தமது சொந்த நிலம் கேட்டு போராடும் இந்த குழந்தைக்கு உங்கள் பதில் என்ன?
No comments:
Post a Comment