•இலங்கையின் புதிய அரசியல் யாப்பு பற்றி பேச
இவர்களுக்கு தகுதி இருக்கிறதா?
இவர்களுக்கு தகுதி இருக்கிறதா?
1990 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் இன்னும் மூடப்படவில்லை. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
கடந்த 34 வருடமாக அகதிகளாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை. அகதி மாணவர்கள் உயர்கல்வி கற்கக்கூட உரிமை வழங்கப்படவில்லை.
தமிழக பொலிசார் ஈழஅகதிகளை துன்புறுத்துகின்றனர். பிடித்து பொய் வழக்கு போடுகின்றனர். “அகதி நாயே” “தேவடியா மவனே” என்றெல்லாம் திட்டுகின்றனர்.
தாசில்தாரின் தொல்லை பொறுக்க முடியாமல் மதுரை அகதிமுகாமில் 6 பிள்ளைகளின் தந்தை மின்சாரக்கம்பியில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார்.
மண்டபம் முகாமில் அகதிப் பெண் ஒருவரை நான்கு பொலிசார் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்த பெண் ராமாதநாபுரம் பெண்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அந்த பொலிசார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் மட்டுமல்ல அதன் பின்னரும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது.
தமிழ்நாடு மக்களிடம் 85ஆயிரம் கோடி ரூபாவை வரியாக பெறும் இந்திய அரசு தமிழக மக்களின் வெள்ள நிவாரணத்திற்கு நிதி இல்லை என்கிறது.
ஆனால் இலங்கை அரசுக்கு தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இரண்டு யுத்தக் கப்பல்களை இந்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி மட்டுமல்ல அடுத்து வந்த மோடி அரசும் தமிழ் மக்களுக்கு விரோதமாக தொடர்ந்து இலங்கை அரசுக்கு உதவி வருகிறது.
600 தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு கடந்த வாரம் இலங்கையில் பயிற்சி வழங்கியுள்ளது.
அதையெல்லாம் எதிர்க்க வேண்டியவர்கள் யாப்பு குறித்து கூட்டம் போட்டு பேசுவது வியப்பாக இருக்கிறது.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று தோழர் தமிழரசன் கூறினார்.
இந்த வரிகளின் அர்த்தத்தை இனியாவது இவர்கள் புரிந்துகொள்வார்களா?
No comments:
Post a Comment