•பெற்றோல் தட்டுப்பாடு
காரணம் என்ன?
காரணம் என்ன?
உலகில் பெற்றோலிய உற்பத்தி நாடுகள் தாராளமாக பெற்றோலை உற்பத்தி செய்கின்றன.
ஆனால் இலங்கையில் திடீரென பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பெற்றோல் விநியோகத்தில் 40 வீதம் இந்திய கம்பனியான LIOC விடமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கம்பனி LIOC யானது தரம் குறைந்த பெற்றோல் கொண்டு வந்தமையால் அதனை இறக்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
தரம்குறைந்த பெற்றோல் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டால் அது வாகனங்களை பாதிக்கும் என்பதாலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஒருமுறை இம் மாதிரி தரம்குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்து இவ் இந்தியன் கம்பனி LIOC விநியோகித்திருக்கிறது. சில வாகன உரிமையாளர்களுக்கு நட்டஈடும் வழங்கியிருக்கிறது.
இம்முறை மீண்டும் தரம் குறைந்த பெற்றோலை கொண்டுவந்து அதனை தடுக்கப்பட்டதும் வேண்டுமென்றே பெற்றோல் தட்டுப்பாட்டை அவ் இந்திய கம்பனி LIOC உருவாக்கியுள்ளது.
பெற்றோல் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஒரு இந்திய கம்பனி என்பதையோ அல்லது முக்கிய எரிபொருள் விநியோகத்தை அந்நிய நாட்டுக் கம்பனிக்கு கொடுத்தது பற்றியோ எவரும் பேசவில்லை.
மாட்டுவண்டியில் பாராளுமன்றம் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றோல் தட்டுப்பாடு குறித்து பேசுகின்றார்களேயொழிய அதற்கு காரணம் இந்திய கம்பனி என்பதை பேசவில்லை.
இன்னும் வேடிக்கை என்னவெனில் இந்த பெற்றோல் தட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச சயிக்கிளில் பாராளுமன்றம் வந்துள்ளார்.
ஆனால் அவருடைய காலத்தில்தான் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை இந்த இந்திய கம்பனிக்கு தாரை வார்த்தவர்.
இலங்கையில் எரிபொருள் விநியோகம் அரச நிறுவனமான பெற்றோலிய கூட்டுத்தாபனமே செய்ய முடியும் என்றிருந்த சட்டத்தை இந்திய கம்பனிக்காக மாற்றியவரும் இந்த மகிந்த ராஜபச்சதான்.
இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் வெறும் 40 வீத மான நிலையிலேயே நாட்டில் ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி குழப்பத்தை இந்த இந்திய கம்பனியால் முடியும் என்றால் அந்த கம்பனி 100வீத பங்கையும் கொண்டிருந்தால் என்னவாகும்?
அதேவேளை இலங்கைக்கு 60 வருடங்களுக்கு போதுமான எண்ணெய்வளம் மன்னாரில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இந்திய கம்பனி ஒன்றிற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் மின்சார விநியோகமும் இன்னொரு இந்திய கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் சம்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்போகும்; மின்சாரத்தை இந்திய கொண்டு செல்வார்கள். பின்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு வருவார்களாம்.
இப்படியொரு கேவலம்கெட்ட முட்டாள்தனமாக ஒப்பந்தத்தையும் இந்தியாவுடன் செய்தவர் இந்த மகிந்த ராஜபக்சதான்.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இலங்கை நாட்டின் எரிபொருள் விநியோகம் மட்டுமன்றி மின்சார விநியோகமும் இந்தியாவிடமே வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் அத்தியாசிய விநியோகத்தை இந்தியாவிடம் கொடுத்திருப்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கும் கவலை இல்லை. இன்றைய ஜனாதிபதி மைத்திரிக்கும் கவலை இல்லை.
இவ் அரசியல்வாதிகளுக்கு தமது பதவி நலன்கள் குறித்துதான் அக்கறையேயொழிய நாடு பற்றியோ அல்லது நாட்டு மக்கள் பற்றியோ கொஞ்சம்கூட அக்கறை இல்லை.
No comments:
Post a Comment