•சிரிக்காமல் இருக்க முடியுமா?
செய்தி – ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றாவிடில் வடக்கு கிழக்கில் கிளர்சி வெடிக்கும் - மாவை சேனாதிராசா அரசுக்கு கடும் எச்சரிக்கை
ஒருமுறை கே.கே. எஸ் வீதியில் பழுதடைந்த ஒரு லாரியை, மற்றொரு லாரி, கயிறைக் கட்டி இழுத்துச் செல்வதை எம்முடைய மாவை சேனாதிராசா பார்த்துக் கொண்டிருந்தார்.
என்ன அண்ணே ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கீங்க? என்று அவரது சீடன் சயந்தன் கேட்டாராம்.
ஒரு கயிறை கொண்டு போறதுக்கு ,ரெண்டு லாரியா என கூறிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் மாவை சேனாதிராசா.
இது ஒரு ஜோக்தான். ஆனால் மாவை அண்ணரின் அறிவை தெரிந்தவர்களுக்கு இது உண்மைதானோ என்ற சந்தேகம் வரும்.
ஆனால் எங்கட மாவையாரின் அரிய கண்டுபிடிப்பு ஒன்று உண்மையில் நடந்தது. சுன்னாகம் பவர் ஸ்ரேசன் கம்பனியின் கழிவு ஆயிலால் கிணற்று நீர் மாசு அடையவில்லை என்று கண்டுபிடித்து கூறினார்.
இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக பவர்ஸ்டேசன் கம்பனி வழங்கிய லஞ்சப் பணமே மாவையாரின் மாவிட்டபுர பங்களாவில் மாபிள் கற்களாகவும் கருங்கல்களாகவும் மாறியுள்ளன.
தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்திற்கு புள்ளடி இட்டால் தமிழ் மக்களுக்கு தீர்வு வரும் என்றார். ஆனால் அவருக்குத்தான் சென்னையில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு, மாவிட்டபுரத்தில் ஒரு வீடு என்று வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் கூறுவதுபோல் மீண்டும் கிளர்சி வெடித்தால் அவருக்கு மீண்டும் பதவி கிடைக்கும். மீண்டும் பல வீடுகள் கிடைக்கும் அல்லவா.
அதனால்தான் என்னவோ வீட்டுச் சின்னத்தையும் தமிழரசுக்கட்சியையும் அவர் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment