•தமிழ் சொலிடாரிட்டியின் “ எமது அரசியல் நிலைப்பாடு”
லண்டனில் இயங்கும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தனது செயற்பாடுகளை விளக்கும் வண்ணம் “ எமது அரசியல் நிலைப்பாடு” என்னும் நூலை வெளியிட்டுள்ளது.
லண்டனில் ஈழத் தமிழர்கள் மத்தியில் பல அமைப்புகள் இயங்குகின்றன. அவற்றுள் தமது நிலைப்பாடுகளை எழுத்தில் புத்தகமாக வெளியிட்டிருப்பது நான் அறிந்தவரையில் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பு மட்டுமே.
கேள்வி பதில் பாணியில் ஒரு உரையாடல் வடிவத்தில் 96 பக்கத்தில் இச் சிறு நூலை அவ் அமைப்பினர் தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர். உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
ஏனெனில் இனி இதுபோன்று மற்ற அமைப்புகளும் தங்கள் நிலைப்பாடுகளை மக்கள் முன் எழுத்து வடிவத்தில் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
தனது பொருளாதார அரசியல் நலன்களுக்காவே இந்தியா இலங்கையில் தலையிடுகிறது என்று இந் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சுமார் 100 க்கு மேற்பட்ட இந்திய கம்பனிகள் 400 மில்லியன் டாலர் பணத்தை இலங்கையில் முதலீடு செய்து இலங்கை மக்களையும் வளத்தையும் சுரண்டுகின்றன என்று குறிப்பிட்டிருப்பது இந்தியாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.
குறிப்பு- உலகின் பல பாகங்களில் இருக்கும் ஆர்வமுள்ள தமிழர்கள் இதனை படிக்கும் வண்ணம் இதன் PDF பிரதியை இணையத்தில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும்.
இந்நால் குறித்து உரையாட விரும்புவோர் தோழர்கள் சேனன் (Tu Senan), பாலேந்திரா நடேசன் ( Pa Nadesan), மற்றும் இசைப்பிரியா ( Isai Priya) ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment