•ராமாயி வயசுக்கு வந்திட்டா!
இந்தியாவுக்கு வல்லரசு குணம் வந்துவிட்டது!!
இந்தியாவுக்கு வல்லரசு குணம் வந்துவிட்டது!!
ராமாயி வயசுக்கு வந்திட்டா என்பது போல் இந்திய அரசும் தான் வல்லரசு பக்குவம் அடைந்துவிட்டதாக காட்டியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய இந்திய உளவுப்படை () முயற்சி செய்ததன் மூலம் இந்தியாவும் தான் வல்லரசாக செயற்பட ஆரம்பித்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
இதுவரை அமெரிக்க வல்லரசின் உளவுப்படையான சிஜஏ மற்ற நாடுகளின் தலைவர்களை கொலை செய்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் வரலாற்றில் முதன் முறையாக இந்திய உளவுப்படையானது அயல் நாடான இலங்கையின் ஜனாதிபயை கொலை செய்ய முயன்றதை இப்போது அறிகிறோம்.
தன்னை இந்திய உளவுப்படையின் உதவியோடு கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி பிரதமர் ரணிலை நீக்கியுள்ளார் ஜனாதிபதி மைத்திரி.
ஆனால் தமிழகத்தில் உள்ள தலைவர்கள் ஒருவர்கூட இந்திய உளவுப்படையின் இந்த செயலை கண்டிக்கவில்லை. மாறாக இந்திய அரசே மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
கொஞ்சம்கூட தர்க்க நியாயம் இல்லாமல் முன்னுக்கு பின் முரணாக இந்த தமிழக தலைவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.
இதில் இன்னும் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவைக் கேட்டே தங்கள் முடிவை அறிவிக்கப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யாவும் கூறுகிறார்.
சம்பந்தர் அய்யாவை தேர்ந்தெடுத்தவர்கள் இந்திய அரசு அல்ல, மாறாக தமிழ் மக்களே. ஆனால் அவரோ தமிழ் மக்கள் நலன் குறித்து சிந்திக்காமல் எப்போதும் இந்திய நலனுக்காகவே செயற்பட்டு வருகிறார்.
இந்திய ஊடுருவலுக்கு எதிராக இலங்கை மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்த வேண்டிய ஜேவிபி கட்சியோ தான் நடுநிலை வகிக்கப் போவதாக கூறுகிறது.
பிரதமர் ரணில் மட்டுமல்ல அவரது நான்கு அமைச்சர்களும் இந்திய உளவுப்படையுடன் சேர்ந்து செயற்படுவதாக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் அவரும்கூட இச் சதித் திட்டம் விசாரணை செய்து இந்திய உளவுப்படையை தண்டிப்போம் என்று கூற முன்வரவில்லை. (இத்தனைக்கும் மகிந்த ராஜபக்சவை சீன ஆதரவாளர் என்று கூறுகிறார்கள்)
எமது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பதவி பெறுவதில்தான் அக்கறை இருக்கிறதே யொழிய தமது தாய்நாட்டின் மீது கொஞ்சம்கூட விசுவாசம் கிடையாது.
•இந்திய உளவுப்படை செய்த கொலைச் சதித்திட்டம் விசாரணை செய்யப்பட வேண்டும்.
•இலங்கையில் இருந்து இந்திய உளவாளிகள் மட்டுமல்ல இந்திய தூதரகமும் வெளியேற்றப்பட வேண்டும்
•இந்திய உளவுப்படைக்கு துணைபோகும் இலங்கையர்களும் இனங் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்.
குறிப்பு – உலகில் இரண்டு பிரதமர் உள்ள நாடு என்ற பெருமை இலங்கைக்கு வந்துள்ளது. இந்த அரசியல்வாதிகள் இன்னும் என்னென்ன பெருமை எல்லாம் வாங்கி தரப் போகிறார்களோ?
No comments:
Post a Comment