Tuesday, October 30, 2018

•மாணவர்கள் போராடுகிறார்கள் தலைவர்கள் சரஸ்வதி பூசை கொண்டாடுகிறார்கள்

•மாணவர்கள் போராடுகிறார்கள்
தலைவர்கள் சரஸ்வதி பூசை கொண்டாடுகிறார்கள்
கொளுத்தும் வெயிலில் நடந்தார்கள்
கொட்டும் மழையிலும் நடந்தார்கள்
ஜந்து நாட்களாக தொடர்ந்து நடந்தார்கள்
கால்கள் புண்ணாகிய நிலையிலும் நடந்தார்கள்
இவர்கள் விரும்பியிருந்தால்
ஒரு நாள் மட்டும் அடையாள போராட்டம் நடத்தியிருக்கலாம்
அல்லது,
இவர்கள் விரும்பியிருந்தால்
யாழ் இந்திய தூதருடன் காந்தி ஜயந்தி கொண்டாடியிருக்கலாம்
அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால்
மற்றவர்கள்போல் நடிகர்களுக்கு கட்அவுட் கட்டி மகிழ்ந்திருக்கலாம்
எதற்காக இந்த மாணவர்கள் போராட வேண்டும்?
எமது தலைவர்கள் போராடியிருந்தால்
மாணவர்கள் போராட வேண்டிய நிலை வந்திருக்காதே?
அரசியல் கைதிகள் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள்
பல்கலைக்கழக மாணவாத்கள் ஜந்து நாட்களாக நடந்தார்கள்
பாடசாலை மாணவர்கள் வழியெங்கும் ஆதரவு தெரிவித்தார்கள்
ஆனால் எமது தலைவர்கள் சரஸ்வதி பூசை கொண்டாடினார்கள்
இதில் கொடுமை என்னவென்றால்
மக்களின் இந்த அகிம்சை போராட்டத்திற்கு
நல்லாட்சி அரசு கொஞ்சம்கூட இரங்கவில்லை
ஆனால் அரசுடன் சேர்ந்து சரஸ்வதி பூசை கொண்டாடிய
எமது தலைவர் சம்பந்தர் அய்யா கூறுகிறார்
அகிம்சை வழியில் போராடியிருந்தால் சுயாட்சி கிடைத்திருக்குமாம்.
இந்த கொடுமையை எங்கே போய் சொல்லி அழுவது?

No comments:

Post a Comment