Thursday, January 30, 2020
•இந்திய உளவு (பாகம்- 5)
•இந்திய உளவு (பாகம்- 5)
என்னுடைய கருத்தை அறிவதற்காக சிலர் நூல் வெளியிட்ட பின்னர் அனுப்புவார்கள். சிலர் வெளியிடுவதற்கு முன்னர் தந்து கருத்து கேட்பார்கள்.
அவ்வாறு ஒரு நூலை படிக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அது தமிழகத்தில் இருந்து ஈழம் வந்து புலிகள் அமைப்புடன் இணைந்து போரிட்ட ஒருவர் எழுதிய நூல். ( விரைவில் வெளி வரும்)
தமிழ்நாட்டில் இருந்து வந்து புலிகளிடம் பயிற்சி பெற்றவர்கள், தாக்குதல்களில் பங்கு பற்றியவர்கள், வீர மரணம் அடைந்தவர்கள் போன்ற விபரங்கள் தற்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும் இது குறித்து ஒரு முழுமையான விபரங்கள் வெளி வரவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. அது ஏன் என்பது பற்றி ஆராய்ந்தேன்.
அப்போது நான் அறிந்த ஒரு தகவல் ஆச்சரியம் தந்தது. தமிழ்நாட்டில் இருந்து வந்த இளைஞர்களுக்குள் இந்திய உளவு அமைப்பால் அனுப்பப்பட்ட ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார் என்பதே அத் தகவல்.
ஆனால் பலிகளின் பலனாய்வுப் பிரிவினர் அந்த ஒருவரைக் கண்டு பிடித்துவிட்டார்கள். எனினும் புலிகள் அவருக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை.
மாறாக அந்த இளைஞரை அவருடன் கூட வந்த மற்ற தமிழக இளைஞர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
உடனே மற்ற தமிழக இளைஞர்கள் ஆத்திரத்தில் இந்த இளைஞரை அடித்தே கொன்று விட்டனர்.
இந்த இளைஞரின் தந்தையார் ஒரு பேராசிரியர் என்றும் அவர்தான் இந்திய உளவு அமைப்பிற்காக தன் மகனை ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
இது நான் அறிந்த செய்தியே. இதன் உண்மை தன்மையை என்னால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.
இதற்கு முன்னர் நான் எழுதிய செய்திகள் யாவும் என் கண்ணால் கண்ட செய்திகள். ஆனால் இந்த செய்தி அப்படியானது அல்ல.
உறுதிப் படுத்தாத இந்த செய்தியை நான் இங்கு பதிவிடுதற்கு ஒரே காரணம் இது பற்றிய உண்மைத் தன்மையை அறிவதற்காகவே.
Image may contain: 1 person, text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment