Thursday, January 30, 2020
• “லைக்கா” சாம்ராஜ்யம் சரிகிறதா?
• “லைக்கா” சாம்ராஜ்யம் சரிகிறதா?
உன் முட்டைகள் அனைத்தையும் ஒரு கூடையில் வைக்காதே என்று ஒரு பைனான்சியல் தியறி கூறுகிறது. ஆம். அதாவது ஒரு பிசினஸ்சில் உன் அனைத்து பணத்தையும் முதலீடு செய்யாதே என்பதையே அது அவ்வாறு கூறுகிறது.
லைக்கா முதலாளியும் பல்வேறு வியாபாரங்களில் தன் பணத்தை முதலீடு செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் தமிழ் சினிமா.
லைக்கா முதலாளியின் வியாபார வளர்ச்சி ஒவ்வொன்றையும் அக்கவுண்ட் பைனான்சியல் தியறி மூலம் விளக்க முடியும். ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இந்த தியறிகள் எதனையும் அவர் ஒருபோதும் படித்திருக்கவில்லை என்பதே.
அகதியாக வந்தவர் இன்று 500 கோடி ரூபாவுக்கு சினிமா படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது குறித்து ஈழத் தமிழர்கள் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்.
அதுவும் தென்னிந்திய சினிமாவில் ஒரு தெலுங்கர் வெற்றி பெற முடியும். ஒரு கன்னடர் வெற்றிபெற முடியும். ஆனால் அதேமாதிரி ஒரு ஈழத் தமிழர் இலகுவில் வெற்றி பெற்றுவிட முடியாது.
ஆனால் அந்த தென்னிந்திய சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பாளராக ஈழத் தமிழரான லைக்கா முதலாளி விளங்குகிறார் எனில் அவரது வியாபார திறமை கவனிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.
அதிக லாபம் பெற வேண்டுமாயின் அதிக றிஸ்க( RISK); எடுக்க வேண்டும் எனவும் ஒரு தியறி இருக்கிறது. அதன்படிதான் லைக்கா முதலாளி அதிக முதலீட்டில் தொடர்ந்து ரஜனி படங்களை தயாரிக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் 500 கோடி ரூபா முதலீட்டில் அழகாக 20 படங்கள் தயாரிக்க முடியும். இதில் ஜந்து படங்கள் ஓடினாலே போட்ட காசு அனைத்தையும் பெற்றுவிட முடியும்.
ஆனால் லைக்கா முதலாளி ஒரே படத்தில் 500 கோடி ரூபாவையும் முதலீடு செய்கிறார். படம் ஓடவில்லை என்றால் 500 கோடி ரூபாவும் ஸ்வாகாதான்.
லைக்கா முதலாளி ரஜனியை வைத்து 2.0 படம் எடுத்தார். படம் தோல்வி. போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை.
விட்ட பணத்தை பிடிக்க என்று இப்போது அதே ரஜனியை வைத்து தர்பார் எடுத்துள்ளார். ஆனால் இப் படமும் வெற்றி பெறப்போவதில்லை என்கிறார்கள்.
பல்வேறு வியாபாரங்களில் அதிக லாபத்தை சம்பாதித்த லைக்கா முதலாளியால் தமிழ் சினிமாவில் அவ்வாறு பெற முடியவில்லை.
ஆனால் இயக்குனர் சங்கர் “வெற்றி பெற்ற சாதனை முதலாளி” என்ற ரீதியில் லைக்கா முதலாளியின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் கூறியுள்ளார்.
அவ்வாறு படமாக்கப்பட்டால் அவரது உண்மை வரலாறு கூறப்படுமா என்று தெரியவில்லை. ஏனெனில் எல்லா முதலாளிகள் போல் அவரது மூலதனமும் (CAPITAL ) சட்ட ரீதியாக சம்பாதிக்கப்பட்டது அல்ல.
குறிப்பு - லைக்கா முதலாளி தனது கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே இப்படி தோல்வியான படங்களை எடுப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை
Image may contain: 1 person, smiling, suit
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment