Thursday, January 30, 2020
தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!
• தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்தவர்களின் நினைவு தினம் இன்று ஆகும்.
யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர்.
இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே.
இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே.
ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள்.
சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம்.
ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை.
Image may contain: outdoor
Image may contain: 1 person, suit and close-up
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment