Thursday, January 30, 2020
கோத்தா ஜனாதிபதியானதும்
கோத்தா ஜனாதிபதியானதும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றீங்களேடா?
அவர் வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தே அரசியல் கைதிகள் விடுதலை என்றீங்களேடா?
13 அயிரம் பேரை விடுதலை செய்தவர் 77 பேரை விடுதலை செய்ய மாட்டாரா என்று வேற கேட்டீங்களேடா?
ஆனால் அரசியல் கைதிகளை ஒவ்வொருவராக சாகவைத்து விடுதலை செய்யப்போறியள் என்பதை சொல்லவேயில்லையேடா?
27 வருடம் சிறையில் இருந்தவரை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மருத்துவ வசதிகூட வழங்காமல் சாகடிச்சிட்டீங்களேடா?
தனது மனைவியின் பிறந்தநாளில் பறவைகளுக்கு விடுதலை வழங்கிய ஜனாதிபதிக்கு 27 வருடம் சிறையில் இருந்தவரை விடுதலை செய்ய தோன்றவில்லையேடா?
மிச்ச 76 பேரையும் இப்படித்தான் சாகடிச்சு விடுதலை செய்யப் போறியளேடா?
குறிப்பு - 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் நேற்று 46 வயதில் மரணமடைந்தார்.
1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மகேந்திரன் கைது செய்யப்படார்.
இவர் நீரிழிவு உள்ளிட்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சை இன்றி நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
Image may contain: 1 person, close-up
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment