Thursday, April 29, 2021
இன்று ஜேவிபி யின் 50 வது ஏப்பரல் நினைவு தினம்
இன்று ஜேவிபி யின் 50 வது ஏப்பரல் நினைவு தினம் ஆகும்.
1971ம் ஆண்டு ஏப்பரல் மாதம் ஜேவிபி அமைப்பினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசின் உதவியுடன் அவர்களது போராட்டம் நசுக்கப்பட்டது. அதில் சுமார் 6000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக மீண்டும் வளர்ந்து இருக்கிறது.
இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?
முதலாவது,
ஜேவியால் மீண்டும் எழ முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது?
இரண்டாவது,
ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை.
மூன்றாவதாக,
தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள்.
நான்காவதாக,
தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
ஜந்தாவதாக
ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள்.
தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment