Thursday, April 29, 2021

சந்தனக்காடு (பகுதி -3)

•சந்தனக்காடு (பகுதி -3) இந்த வீரப்பன் பற்றிய தொடர் அற்புதமாக எடுத்துள்ளார்கள் என்பது உண்மைதான். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். ஆனால் இந்த தொடரில் மூன்று விடயங்கள் குறித்து விபரங்கள் எதிர்பார்த்தேன். அவை இல்லாததால் சிறது ஏமாற்றம் அடைந்தேன். (1) வீரப்பன் யானைகளை சுட்டு தந்தம் எடுத்தார். சந்தன மரங்களை வெட்டி விற்றார் என்று அனைத்து பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதி வருகின்றன. ஆனால் ஒரு பத்திரிகைகூட காட்டுக்குள் இருந்த வீரப்பனிடம் இவற்றை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த அந்த மான்புமிகு நபர்கள் யார் என்பதை எழுதியதில்லை. (2) பூலான்தேவி போன்று வீரப்பனை சரணடைய வைக்க அரசும் பொலிஸ் அதிகாரிகளும் ஏன் முயற்சி செய்யவில்லை? வீரப்பன்கூட சரணடைய விரும்பியதாக தகவல்கள் உண்டு. (3) நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது பணம் கொடுக்கப்பட்டதாக அறிய வருகிறது. எத்தனை கோடி ரூபா பணம் வழங்கப்பட்டது? இது யார் பணம்? அந்த பணத்தில் கூட இருந்த தமிழ்தேசிய போராளிகளுக்கு எத்தனை கோடி ரூபா வீரப்பன் கொடுத்தார்? மேற்கண்ட மூன்று விடயங்கள் குறித்து விபரங்கள் எதிர் பார்த்தேன். இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் , வீரப்பன் தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை வீரப்பன் சந்தன மரம் வெட்டிய போது கொல்லப்படவில்லை வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட கொல்லப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதும் சுட்டுக் கொல்லப்பட்டார். குறிப்பு – சந்தனக்காடு எடுத்த கௌதமன் தோழர் தமிழரசன் பற்றி முந்திரிக்காடு எடுக்க முயல வேண்டும்.

No comments:

Post a Comment