Thursday, April 29, 2021
இத்தாலி கடற்படையை
இத்தாலி கடற்படையை நீதிமன்றில் நிறுத்த முடியுமாயின்
இலங்கை கடற்படையை ஏன் நீதிமன்றில் நிறுத்த முடியாது?
கேரளாவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012 பிப்ரவரி 15-ம் தேதி விசைப்படகில் 11 இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற 'என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலிய சரக்கு கப்பலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலி யானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகியோர் இந்திய மீனவர்களை சுட்டனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் உயிரிழந்தனர். உடன் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டில் அவர்கள் இத்தாலி திரும்பினர்.
இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், "இந்திய மீனவர்களை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம். இதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
இத்தாலி அரசு இதுவரை ரூ.2.17 கோடி வழங்கி உள்ளது. தற்போது இத்தாலி அரசு வழங்கும் மேலும் ரூ.10 கோடி இழப்பீட்டை பெற்று கொள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்போது எழும் கேள்வி என்னவெனில் இரண்டு மீனவர்களை கொன்றமைக்காக இத்தாலிய கடற்படையை நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமாயின் 825 தமிழக மீனவர்களை கொன்றமைக்காக இலங்கை கடற்படையை ஏன் நிறுத்த முடியாது?
ஏனெனில் கேரளா கடலில் கொல்லப்பட்டவர்களை இந்திய மீனவர்களாக கருதும் இந்திய அரசு தமிழக கடலில் கொல்லப்படுபவர்களை இந்திய மீனவராக கருதாமல் தமிழக மீனவராகவே கருதுகிறது.
இந்திய அரசு தமிழரை இந்தியராக கருதவில்லை எனில் தமிழர் மட்டும் தம்மை ஏன் இந்தியராக கருத வேண்டும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment