Thursday, April 29, 2021
யார் இந்த இந்திய பிரஜை?
•யார் இந்த இந்திய பிரஜை?
இவரின் மரண மர்மம் வெளிவருமா?
இலங்கையில் குளியாப்பிட்டி பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பாக கடந்த மாதம் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவ் இந்திய பிரஜை திடீரென மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ் இந்திய பிரஜையின் மரணம் குறித்து ஜே.வி.பி தலைவர் அனுரா திசநாயக்கா சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி தலைவர் குறிப்பிட்டது போன்று இவ் மரணத்துடன் பல முக்கியமான தகவல்கள்களும் மறைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
இவ் விடயம் தொடர்பாக எழும் கேள்விகள்,
(1) கொல்லப்பட்ட இந்திய பிரஜை சாதாரண நபரா? அல்லது இந்திய உளவுப்படையைச் சேர்ந்தவரா?
(2) உளவுப்படையைச் சேர்ந்தவராயின் இலங்கையில் தமிழ் சிஙகள மக்களிடையே ஒரு கலவரத்தை எற்படுத்த இந்திய உளவுப்படைகள் முயற்சிக்கின்றனவா?
(3) மரணமடைந்த இந்திய பிரஜை விசாரணையில் வெளியிட்ட முக்கியமான தகவல்கள் என்ன? அவர் எதற்காக கொல்லப்பட வேண்டும்?
(4) ஒரு இந்திய பிரஜை காவலில் மரணமடைந்துள்ளார். ஆனால் இந்திய அரசோ அல்லது இந்திய தூதரோ இது குறித்து எந்த அக்கறையும் கொள்ளாதது ஏன்?
குறிப்பு - இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மைத்திரி அவர்கள் இந்திய உளவுப்படை தன்னைக் கொல்ல சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஒரு இந்திய பிரஜை(மலையாளி) கைது செய்யப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறி இந்திய தூதரால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இந்திய பிரஜை எதற்காக, எப்படி கொழும்பில் தங்கியிருந்தார்? அவருக்கு இலங்கை அரசு ஏன் விசா கொடுத்தது? என்பது குறித்து இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment