Tuesday, August 15, 2023
அபிவிருத்தி என்றால் என்ன?
•அபிவிருத்தி என்றால் என்ன?
எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை.
உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்?
றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே?
அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது.
1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள்.
இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது.
இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது.
கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment