Sunday, October 29, 2023
இந்திய அரசு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை
இந்திய அரசு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தது.
அதன் தலைவர் யசீர் அரபாத்திற்கு செங்கள வரவேற்பு அளித்தது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் இந்தியாவில் அலுவலகம் அமைக்க அனுமதித்தது.
ஆனால் இந்திய அரசு தமிழீழத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.
ஈழப் போராளிகள் இயக்கத்தை அங்கீகரிக்கவில்லை.
ஈழப் போராளி தலைவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கவில்லை.
வெளிப்படையாக அலுவலகங்கள் அமைக்கவும் அனுமதிக்கவில்லை.
அதனால்தான் தோழர் தமிழரசன்,
பாலஸ்தீனத்தை அங்கரித்ததுபோன்று தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்ததுபோன்று ஈழ விடுதலை இயக்கங்களையும் அங்கீகரித்து உதவ வேண்டும்
என்று வலியுறுத்தி அரியலூர் ரயில் பாலத்திற்கு குண்டு வைத்தார்.
அன்று தோழர் தமிழரசன் வலியுறுத்தியதை வேறு எந்த அரசியல் தலைவரும் வலியுறுத்தவில்லை.
ஈழ போராளி அமைப்பு தலைவர்களும்கூட தோழர் தமிழரசன் கோரிக்கை எந்தளவு அவசியமானது என்பதை உணர தவறிவிட்டனர்.
தோழர் தமிழரசன் கோரிக்கை நிறைவேறியிருந்தால் ஈழப் போராட்ட வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும்.
முள்ளிவாய்க்கால் அவலம்கூட நிகழ்ந்திருக்காது.
குறிப்பு – ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இந்திய அரசு உதவவில்லை என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment