Sunday, October 29, 2023
ஈழத்து கருணாநிதியா சம்பந்தர் ஐயா?
• ஈழத்து கருணாநிதியா சம்பந்தர் ஐயா?
கலைஞர் கருணாநிதி இறக்கும்வரை தனது பதவியை துறக்கவில்லை.
அதுபோல் சம்பந்தர் ஐயாவும் இறக்கும்வரை தனது பதவியை துறக்கமாட்டார் என்றே கூறுகின்றனர்.
சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என்று இரு தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் பகிரங்கமாக கோரியிருந்தார்.
இந் நிலையில், சம்பந்தர் ஐயா பதவி விலகுமாறு கோர சுமந்திரனுக்கு அருகதை இல்லை என்று சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார்.
தீர்வு பெற்றுத் தரவில்லை என்றால் பதவி விலகுவேன் என்று நல்லாட்சி அரசில் சுமந்திரன் கூறியிருந்தார்.
அதன்படி அவர் பதவி விலகவில்லை. எனவே சம்பந்தர் ஐயாவை கோர சுமந்திரனுக்கு தகுதி இல்லை என்கிறார் தவராசா.
ஆம். தவராசா கூறுவது உண்மைதான். சுமந்திரனுக்கு தகுதி இல்லைதான்.
ஆனால் சுமந்திரனுக்கு தகுதி இல்லை என்பதற்காக சுமந்திரன் கோரிய கோரிக்கை தவறு என்று அர்த்தம் இல்லை.
சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும் என்பது நியாயமான தேவையான கோரிக்கை. அவசியமான கோரிக்கையும்கூட.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment